செய்திக்கொத்து

புதிதாக 38 பேருக்கு தொற்று

சமூக அளவில் 27 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 18) நண்பகல் நிலவரப்படி புதிதாக 38 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் கிருமி தொற்றியவர்களில் 11 பேருக்கு முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்லை. எஞ்சிய 16 பேர் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள். சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 11 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. அவர்களில் ஆறு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள். வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,651 ஆக உள்ளது.

ரென் சி தாதிமை இல்லத்தில் தொற்று இல்லை

அங் மோ ­கியோவில் உள்ள ரென் சி தாதிமை இல்லத்தில் நடத்தப்பட்ட கொவிட் 19 பரிசோதனைகளில் அதன் ஊழியர்களுக்கும் அங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கும் தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

அங்கு பணியாற்றும் 39 வயது ஆண் தாதி ஒருவருக்கு கொவிட் 19 தொற்றியதைத் தொடர்ந்து அங் மோ கியோ ரென் சியில் உள்ள எல்லாரும் பரிசோதிக்கப்பட்டனர்.

கொவிட்-19 தொற்றிய ஆண் தாதிக்கு சாங்கி விமான நிலையக் குழுமத்திலிருந்து கிருமி பரவியது. மே 4ம் தேதி சாங்கி விமான நிலையத்துக்குச் சென்ற விற்பனை அதிகாரியும் ரென் சி தாதியும் ஒரே வீட்டைச் சேர்ந்தவர்கள். கடந்த ஞாயிறு தாதிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் தற்போது கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரென் சி இல்லத்தில் தாதி பணியாற்றிய பகுதி அடையாளம் காணப்பட்டு, அங்குள்ள நோயாளிகளும் ஊழியர்களும் பரிசோதிக்கப்பட்டனர். அப்பகுதிக்கு விருந்தி னர்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. தாதிமை இல்லம் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் ஃபேர்பிரைஸ் மூடப்பட்டது: ஊழியருக்கு தொற்று

உட்லண்ட்ஸ் அவென்யூ ஒன்றில் உள்ள சாம்பியன்ஸ் கோர்ட் அடுக்குமாடிக் கட்டடத்தில் அமைந்துள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பணியாற்றும் ஓர் ஊழியருக்குக் கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொவிட்-19 கிருமிப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

ஊழியருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து என்டியுசி ஃபேர்பிரைஸ் அது பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. புளோக் 570பியில் அமைந்துள்ள அந்தக் கிளை வரும் வியாழக்கிழமை வரை சுத்தம் செய்யும் பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட கிளையில் பணியாற்றுவோர் அனைவரும் விடுப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். கொவிட்-19 தொற்றிய ஊழியருக்கு ஏற்கெனவே இரண்டு தடுப்பூசிகளும் போடப்பட்டதாக என்டியுசி ஃபேர்பிரைஸ் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!