கட்டுமானத் தளங்களுக்குச் செல்வோருக்குப் பரிசோதனை

கட்டுமானத் தளங்களுக்குச் செல்வோருக்குப் பரிசோதனை

1 mins read
25dee149-223e-4ed5-9f9a-ed7075a277c1
-

விநி­யோக ஊழி­யர்­கள், அர­சாங்க ஆய்­வா­ளர்­கள், கட்­டு­மான, ஆலோ­சனை நிறு­வ­னங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் உட்­பட கட்­டு­மா­னத் தளங்­களுக்கு வரு­கை­புரியும் அனை­வரும் அவ்­வி­டங்­களில் நுழை­யு­ம் முன் கட்­டா­ய­ம் கொவிட்-19 பரி­சோதனை செய்திருக்க வேண்­டும் என்று கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

அவ்­வி­டங்­க­ளுக்­குச் செல்­வ­தற்கு 14 நாள்­க­ளுக்­கு­முன் குறைந்­தது ஒரு­மு­றை­யே­னும் அவர்­கள் எச்­சில்/சளி மாதிரி பரி­சோ­தனை செய்துகொண்டு, 'தொற்று இல்லை' என உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பின்­னும் கிருமி தொற்­றி­யுள்­ளதா என உட­ன­டி­யா­கக் கண்­டு­பி­டிக்க ஏது­வாக, தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வந்த, 14 அல்­லது 28 நாள்­க­ளுக்கு ஒரு­முறை கொரோனா பரி­சோ­தனை செய்­து­கொண்­டால் போதும் என்ற சலுகை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­ப­டு­கிறது.

அதா­வது, தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும் போடா­வி­டி­னும், விடு­தி­யில் தங்­கி­யுள்­ளாரா என்­பது போன்ற அபாய நிலை­யின் அடிப்­ப­டை­யில், அனை­வ­ரும் ஏழு அல்­லது 14 நாள்­களுக்கு ஒரு­முறை கட்­டா­யம் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

இந்த நட­வ­டிக்­கை­கள் உட­னடி­யாக நடை­மு­றைக்கு வரு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­தது. கட்­டு­மா­னத் தளங்­களில் வேலை செய்­யும் அல்­லது வரு­கை­பு­ரி­யும் பட்­சத்­தில், சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், வேலை அனு­மதி அட்டை உடை­யோர் அனை­வ­ருக்­கும் இந்த எச்­சில்/சளி மாதிரி பரி­சோ­தனை விதி­முறை பொருந்­தும்.

அட்­ட­வ­ணைப்­படி வழக்­க­மான பரி­சோ­தனை செய்­து­கொள்­ளத் தவ­றும் ஊழி­யர்­க­ளைப் பணி­யில் ஈடு­ப­டுத்த முடி­யாது என்­றும் அவர்­கள் மீதும் அவர்­கள் பணி­பு­ரி­யும் நிறு­வ­னங்­கள் மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் ஆணை­யம் தெரி­வித்து இருக்­கிறது.