கம்போடியாவிலும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது புரோப்நெக்ஸ்

கம்போடியாவிலும் செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது புரோப்நெக்ஸ்

1 mins read
c465e55e-eec8-4804-9c03-7bb1a8a329ba
-

சொத்துச்சந்தை நிறுவனமான புரோப்நெக்ஸ் கம்போடியாவிலும் செயல்பாட்டைத் தொடங்கி இருப்பதாக இன்று அறிவித்தது. அங்கு மேம்பாட்டாளர்களுடன் இணைந்து இரண்டு மேம்பாட்டுத் திட்டப்பணிகளில் ஈடுபடுவதாகவும் அது குறிப்பிட்டது.

சிங்கப்பூர் தவிர இந்தோனீசியா, மலேசியா, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளிலும் தங்களது செயல்பாட்டைக் கொண்டிருக்கும் புரோப்நெக்ஸ் நிறுவனத்தில் 12,000 முகவர்கள் இருக்கின்றனர்.

'புரோப்நெக்ஸ் கம்போடியா' நிறுவனத்தை திரு ஆலன் நியோ தலைமை நிர்வாக அதிகாரியாக வழிநடத்துவார். கிட்டத்தட்ட 500 முகவர்களைக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகம் புனோம்பென்னில் அமைகிறது. சியம் ரீப், சிஹானுக்வில் ஆகிய இடங்களில் கிளைகள் செயல்படும்.

ஹாங்காங் சொத்து மேம்பாட்டு நிறுவனமான அர்பன் ஹப் (கம்போடியா) நிறுவனத்துடன் இணைந்து புனோம்பென்னில் 760,000 சதுரமீட்டர் பரப்பளவிலான 'அர்பன் வில்லேஜ்' எனும் திட்டப்பணியிலும், ஹோங் லாய் ஹுவாட் குழுமத்தால் உருவாக்கப்படும் ட்'சீவியூ எனும் திட்டப்பணியிலும் புரோப்நெக்ஸ் கம்போடியா நிறுவனம் இணைந்து செயல்படுகிறது.