மோட்டார்சைக்கிள்களைத் தவிர மற்ற பிரிவுகளுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) குறைந்து காணப்பட்டன. 1,600சிசி அளவிலான சிறிய ரக கார்களுக்கான சிஓஇ $48,002லிருந்து $41,801ஆகக் குறைந்தது.
1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான சிஓஇ $60,001லிருந்து $58,089ஆகக் குறைந்தது.
மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய வாகனங்களுக்கான சிஓஇ $63,002லிருந்து குறைந்து $62,000 ஆனது.
வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $43,001லிருந்து குறைந்து $41,701 ஆனது. ஆனால், மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $8,011லிருந்து $8,701ஆக அதிகரித்தது.

