அண்மை காலமாக சிங்கப்பூரில் சமூக அளவிலான கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தடை விதிக்கப் பட்டிருப்பது அவற்றில் ஒன்று.
இதன் காரணமாக டாக்சி, ஓட்டுநர்கள், விநியோக ஓட்டுநர்கள், சமூக இடைவெளி தூதர்கள் போன்ற வெளிப்புற இடங்களில் பணிபுரிவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இத்தகையோர் அமர்ந்து உணவருந்தவும் சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும் கம்போங் கெம்பாங்கான் சமூக மன்றம், கம்போங் உபி சமூக மன்றம், பிராடல் ஹைட்ஸ் சமூக மன்றம் ஆகிய இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
படம்: ஸ்ட்ரெட்ய்ஸ் டைம்ஸ்

