பிரதமர் லீ:அமெரிக்கா-சீனா உறவு கசந்தால் உலகிற்குப் பின்னடைவு

பிரதமர் லீ:அமெரிக்கா-சீனா உறவு கசந்தால் உலகிற்குப் பின்னடைவு

2 mins read
58c45a1a-2d3d-4d96-a871-b92dcb0e3254
-

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான உறவு கசந்­தால் அவற்­றுக்கு மட்­டு­மின்றி உலக நாடு­க­ளுக்­கும் பின்­ன­டை­வாக அமை­யும் என்று இணை­யம் மூலம் நடை­பெற்ற அமெ­ரிக்க வர்த்­தக சபை­யின் உல­க­ளா­வி­யப் பொரு­ளி­யல் மீட்சி கருத்­த­ரங்­கில் பிர­த­மர் லீ சியன் லூங் கலந்­து­கொண்டு தெரி­வித்­தார்.

"பெரு­ம­ள­வி­லான பொரு­ளி­யல், தொழில்­நுட்பப் பலம், ஆயு­தங்­கள், அணு­வா­யு­தம் ஆகி­ய­வற்­றைக் கொண்ட நாடு­க­ளாக அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் திகழ்­கின்­றன. நவீ­ன­ம­ய­மான ஆயு­தப் படையை சீனா கொண்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வின் ஆயு­தப் படை உல­கி­லேயே மிக­வும் சக்­தி­வாய்ந்­தது.

"ஆனால் என்­ன­தான் சக்­தி­வாய்ந்த படை­க­ளாக இருந்­தா­லும் போருக்­குச் செல்­லும்­போது பெருத்த சேதம் ஏற்­ப­டு­வது நிச்­ச­யம்.

"எனவே ஒன்­றி­ணைந்து செயல்­ப­ட­வும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் ஏற்­றுக்­கொள்­ள­வும் இரு­நா­டு­களும் முடி­வெ­டுப்­பது அவ­சி­யம். அமெ­ரிக்கா-சீனா ஒத்­து­ழைப்­புக்­குப் பல வாய்ப்­பு­கள் உள்­ளன," என்று திரு லீ கூறி­னார்.

பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்­வது அதில் ஒன்று என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார். அது­

மட்­டு­மல்­லாது, பொது சுகா­தா­ரம், எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூ­டிய கிரு­மித்­தொற்­று­கள் ஆகி­யவை தொடர்­பா­க­வும் இரு­நா­டு­களும் இணைந்து செயல்­ப­ட­லாம் என்­றார் அவர்.

பணக்­கார நாடா­கி­விட்­ட­தாக சீனா உணர்வதாகவும் சக்­தி­வாய்ந்த நாடு என்ற அங்­கீ­கா­ரம் வேண்­டும் என அது விரும்­ப­வ­தா­க­வும் திரு லீ கூறி­னார்.

"ஆனால் வேறு சக்­தி­வாய்ந்த நாடு­களும் இருப்­பதை உணர வேண்­டும். சக்­தி­வாய்ந்த நாடு என்று நீண்­ட­கா­லத்­துக்கு மற்ற நாடு­கள் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். இந்த நிலையை அமெ­ரிக்கா சிறப்­பாக தக்­க­வைத்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வுக்கு உல­கி­லேயே சக்­தி­வாய்ந்த கடற்­படை, விமா­னப் படை, ராணு­வம் ஆகி­யவை உள்­ளன. அது­மட்­டு­மல்­லாது, அமெ­ரிக்­கா­வுக்கு உல­கெங்­கும் பல நட்பு நாடு­கள் இருக்­கின்­றன. பயம் கார­ண­மாக அமெ­ரிக்­கா­வு­டன் அவை ஒத்­து­ழைக்­க­வில்லை. மாறாக, தங்­க­ளுக்­கும் வாய்ப்­பு­கள் இருப்­பதை இந்த நாடு­கள் உணர்­கின்­றன.

"பிற நாடு­க­ளுக்­கும் வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தால் உல­கத்­துக்கு அமெ­ரிக்கா நன்மை செய்­கிறது," என்­றார் திரு லீ.

அமெ­ரிக்­கா­வின் இந்த மனப்­போக்கு சீனா­வுக்கு உடனே வராது என்­றும் அதற்கு நாள் எடுக்­கும் என்றும் பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.இதற்­கி­டையே, சீனா­வின் வளர்ச்­சியை அமெ­ரிக்கா ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்றார் அவர்.

"இரு­நா­டு­களும் ஒன்­றி­ணைந்து செயல்­ப­டா­மல் மோதிக்­கொண்­டா­லும் யாரும் விட்­டுக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை. சீனா சோவியத் யூனி­ய­னைப் போல அழிந்­து­வி­டாது. முன்­னோக்­கிச் செல்ல அது துடிப்­பு­டன் செயல்­ப­டு­கிறது. அதே சம­யத்­தில் அமெ­ரிக்­கா­வும் எந்த வகை­யி­லும் குறைந்­த­தல்ல. அது­வும் தொடர்ந்து வலி­மை­யு­டன் இருக்­கிறது. எனவே ஒன்­றி­ணைந்து செயல்­ப­டு­வது இரு­நா­டு­க­ளின் பொறுப்­பா­கும்," என்று பிர­த­மர் லீ வலி­யு­றுத்­தி­னார்.

இது ஒரு­பு­றம் இருக்க பாரிஸ் ஒப்­பந்தத்­தில் அமெ­ரிக்கா மீண்­டும் இணைந்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாக இருந்­தா­லும் பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்ள பெரிய நாடு­களும் சிறிய நாடு­களும் கூடு­தல் முயற்சி எடுக்க வேண்­டும் என்று திரு லீ உலக நாடு­

க­ளுக்கு அழைப்பு விடுத்­தார்.

ஐநா­வின் 26வது பரு­வ­நிலை மாற்­றம் மாநாடு இவ்­வாண்டு பிரிட்­ட­னில் நடை­பெ­று­வதை சுட்­டிய திரு லீ, பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்ள மேலும் அதி­க­மான நாடு­கள் பரிந்­து­ரை­களை முன்­வைக்க வேண்­டும் எனக்

கேட்­டுக்­கொண்­டார்.