சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 6,500 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் 6,500 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை

2 mins read
c43d93b7-dae2-47a7-9f2c-4074e40d78ec
-

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லும் மூன்று மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து, அந்­தப் பல­

து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மாண­வர்­கள், ஊழி­யர்­கள், உணவு நிலை­யக் கடைக்­கா­ரர்­கள் என 6,500 பேருக்கு நேற்­றி­லி­ருந்து கொரோனா மருத்­து­வப்

பரி­சோ­தனை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் தொடர்­பில் இருந்­த­தற்­கான ஆதா­ரம் இது­வரை இல்லை என்று சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி கூறி­யது.

"எங்­கள் வளா­கத்­தில் பயி­லும் மூன்று மாண­வர்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தா­லும் அவர்­க­ளது வகுப்­பு­கள் அரு­க­ருகே இருப்­ப­தா­லும் இந்­தக் கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கையை எடுக்க முடிவு செய்­துள்­ளோம். வளா­கத்­தில் கிரு­மிப் பர­வ­லுக்­கான அபா­யத்­தைக் குறைக்க இவ்­வாறு செய்­கி­றோம்," என்று சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி தெரி­வித்­தது.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் ஐந்து பள்­ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், ஊழி­யர்­கள், உணவு நிலை­யக் கடைக்­கா­ரர்­கள் என 6,500 பேருக்கு கொரோனா மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­து­வது குறித்து முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.

கடந்த மாதம் 29ஆம் தேதி­யன்­றும் அதற்­குப் பிற­கும் வளா­கத்­தில் இருந்­த­வர்­கள் பரி­சோ­திக்­கப்­ப­டு­வர்.

கணி­னி­வி­யல் பள்ளி, ஊட­கத் துறை பள்ளி, கலை­கள் மற்­றும் வடி­வ­மைப்­புப் பள்ளி, வர்த்­த­கப் பள்ளி, இயந்­தி­ர­வி­யல் மற்­றும் விமா­னப் பொறி­யி­யல் பள்ளி ஆகி­யவை பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

தொடர் கல்வி மற்­றும் பயிற்சி வகுப்­பு­கள், மின்­சா­ரம் மற்­றும் மின்­ன­ணு­வி­யல் பொறி­யி­யல் வகுப்­பு­கள் ஆகி­ய­வற்­றில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு முத­லில் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் டோவர் சாலை வளா­கத்­தில் உள்ள விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடத்­தப்­படும் இந்த மருத்­து­வப் பரி­சோ­தனை, அடுத்த சில நாட்­க­ளுக்­குத் தொட­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட அனை­வ­ருக்­கும் கொவிட்-19 மருத்­து­வப் பரி­சோ­தனை தொடர்­பான விவ­ரங்­களை குறுந்­த­க­வல் மூலம் சுகா­தார அமைச்சு அனுப்­பி­வைக்­கும்.

முதல் கட்ட பரி­சோ­தனை முடிந்த பிறகு ஒட்­டு­மொத்த அபாய நிலை குறித்து மறு­ஆய்வு நடத்­தப்­படும் என்று தெரி­வித்த சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, அதன் பிறகே மீத­முள்ள மாண­வர்­கள், ஊழி­யர்­க­ளுக்கு மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­து­வது பற்றி முடி­வெ­டுக்­கப்­படும் என்று கூறி­யது.

சிங்­கப்­பூர் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் 14,000க்கும் அதி­க­மான மாண­வர்­களும் ஊழி­யர்­களும் உள்­ள­னர்.