விதிமீறல்களுக்காக இரண்டு உணவகங்களை மூட உத்தரவு; 2 கடைகள், 9 பேருக்கு அபராதம்

விதிமீறல்களுக்காக இரண்டு உணவகங்களை மூட உத்தரவு; 2 கடைகள், 9 பேருக்கு அபராதம்

2 mins read
0c283988-da47-47d7-af18-a0ce93eb9f10
-

கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­களை கடந்த வார இறு­தி­யில் மீறி­ய­தற்­காக இரண்டு உணவு, பானக் கடை­களை மூட உத்­த­ர­வி­டப்­பட்­டுள்ள நிலை­யில் இரண்டு கடை­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாசிர் பஞ்­சாங்­கில் உள்ள ஹூஹா ரெஸ்­டா­ரன்ட் & கபே 30 நாள்­க­ளுக்­கும், ஒன் நார்த்­தில் இருக்­கும் டார்ட்ஸ் லெஜெண்ட் 20 நாள்­க­ளுக்­கும் மூடப்­பட்­டி­ருக்­கும் என நீடித்த நிலைத்­தன்மை மற்­றும் சுற்­றுப்­புற அமைச்­சின் நேற்­றைய அறிக்கை குறிப்­பிட்­டது.

வாடிக்­கை­யா­ளர்­கள் பாது­காப்பு இடை­வெ­ளி­யைக் கடைப்­பி­டிக்­கா­தது உட்பட பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­களை மீறி­ய­தற்­காக நீ ஆன் சிட்­டி­யில் இருக்­கும் ஃபூட் வில்­லேஜ், தி சுஷி பார் டைனிங் ஆகிய இரு கடை­க­ளுக்­கும் தலா $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும், வெளிப்­புற பொது இடங்­களில் கூட்­டம் அதி­க­மா­னால் அவை­யும் தேசிய பூங்­காக்­கள் கழ­கத்­தால் தற்­கா­லி­க­மாக மூடப்­படும் என அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

சில பூங்­காக்­கள், கடற்­க­ரை­கள், புல்­வெ­ளி­கள் போன்­ற­வற்­றின் சில பகு­தி­கள், கார் நிறுத்­து­மி­டங்­கள் போன்ற வெளிப்­புற இடங்­கள் இவற்­றுள் அடங்­கும்.

கூட்­டம் குறை­வாக இருக்­கும்­போது அவை திறக்­கப்­படும்.

இம்­மா­தம் 14ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு மேல் வாடிக்­கை­யா­ளர்­கள் மது அருந்த அனு­ம­தித்­த­து­டன் அட்டை விளை­யாட்­டு­கள் விளை­யாட வாடிக்­கை­யா­ளர்­களை அனு­ம­தித்­தது ஹூஹா. இது அந்­தக் கடை­யின் இத்­த­கைய மூன்­றா­வது குற்­றம்.

அதே நாளில் டார்ட்ஸ் லெஜெண்ட் தமது வாடிக்­கை­யா­ளர்­களை விளை­யாட அனு­ம­தித்­தது. இது இந்­தக் கடை­யின் இத்­த­கைய இரண்­டா­வது குற்­றம்.

உண­வ­கங்­களில் உண­வ­ருந்த அனு­மதி அளிக்­கப்­ப­டும்­போது இந்­தக் கடை­கள் மூடப்­ப­டு­வது நடப்­புக்கு வரும் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

இரு­வ­ருக்கு மேல் குழுக்­க­ளா­கக் கூடி­ய­தாக ஒன்­பது பேருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

பூங்­காக்­களில் உள்ள அனைத்து நீர் விளை­யாட்டு, பொழு­து­போக்கு வச­தி­களும் ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்­றும் அமைச்சு தெரி­வித்­தது.