ஏழு கிலோகிராம் போதைப்பொருள் பிடிபட்டது; எழுவர் கைது

ஏழு கிலோகிராம் போதைப்பொருள் பிடிபட்டது; எழுவர் கைது

1 mins read
2232b5a1-941f-4fbc-9db9-d3c6de906286
-

ஏழு கிலோ­கி­ரா­முக்­கும் அதி­க­மான போதைப்­பொ­ருள்­க­ளைக் கைப்­பற்­றிய மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு அதன் தொடர்­பில் ஏழு பேரைக் கைது செய்­துள்­ளது.

கிட்­டத்­தட்ட 2,287 கிராம் ஹெரா­யின் 5,041 கிராம் 'ஐஸ்', 630 கிரா­முக்­கும் அதி­க­மான எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள் பிடி­பட்­டன. நேற்று முன்­தி­னம் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­களில் இந்­தப் பொருள்­கள் சிக்­கி­ய­தா­கக் கூறப்­பட்­டது. ஜூரோங் ஈஸ்ட் அவென்யூ 1 பகு­தி­யில் 26,28 வய­து­களில் இருந்த இரு சிங்­கப்­பூர் ஆடவர் ­கள் கைதா­கி­னர். சாய் சீ ஸ்தி­ரீட்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கை­யில் சிங்­கப்­பூர் ஆட­வர் மூவர் கைதா­கி­னர். வாம்­போ­வில் உள்ள லோரோங் லிமாவ் பகு­தி­யில் மற்­றொரு சிங்­கப்­பூர் ஆட­வர் கைதா­னார். அவ­ரு­டைய வீட்­டில் நிரந்­த­ர­வாசி மாது ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். பிடி­பட்­ட­வர்­க­ளி­ட­மி­ருந்து $850,000 மதிப்­பி­லான போதைப்­பொ­ருள்­களை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர்.

ஹெராயின் போதைப்பொருள் பயன்படுத்துவோர் 1,090 பேர், 'ஐஸ்' போதைப்பொருள் பயன்படுத்துவோர் 2,880 பேர் ஆகியோர் ஒரு வார காலத்துக்குப் பயன்படுத்தும் அளவிலான போதைப்பொருள்கள் அவை எனக் கூறப்பட்டது.

படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு