அமெரிக்காவுக்கு வெளியுறவு அமைச்சு நினைவூட்டல்

வெளி­நாட்­டுத் தூத­ர­கங்­கள் சிங்­கப்­பூ­ரின் உள்­நாட்டு சமூக, அர­சி­யல் விவ­கா­ரங்­களில் தலை­யி­ட­லா­காது என்று இங்­குள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கு நினை­வூட்­டி­ய­தாக வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­துள்­ளது. பாலின வகைப்­பாட்டை அர­சாங்­கக் கொள்­கை­களில் எப்­படி முறைப்­ப­டுத்­து­வது என்­ப­தும் அதில் அடங்­கும்.

தன்­பா­லின ஈர்ப்­புள்­ள­வர்­கள், இரு­பா­லின ஈர்ப்­புள்­ள­வர்­கள், பாலி­னம் மாறி­ய­வர்­கள் ஆகி­யோ­ரு­டன் பணி­யாற்­றும் 'ஓகச்­சாகா' எனும் உள்­ளூர் அமைப்­பு­டன் இணைந்து அமெ­ரிக்­கத் தூத­ர­கம் கடந்த திங்­கட்­கி­ழமை இணை­யக் கருத்­த­ரங்கை நடத்­தி­யது.

அந்த நிகழ்ச்சி நடை­பெற்­றதை வெளி­யு­றவு அமைச்சு "வருத்­தத்­து­டன் கவ­னிப்­ப­தாக" அதன் பேச்­சா­ளர் கூறி­னார். மேலும், பாலின நாட்­டம் போன்ற விவ­கா­ரங்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் மட்­டுமே விவா­தித்து முடிவு செய்ய வேண்­டிய தெரி­வு­கள் என்­றார் பேச்­சா­ளர்.

அழைப்­பின் பேரில் மட்­டும் கலந்து­கொள்­ளும் அந்த இணை­யக் கருத்­த­ரங்கை அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த புகழ்பெற்ற பொருளியல் துறை பேரா­சி­ரி­யரான லீ பேட்­ஜட் நடத்­தி­னார்.

வெவ்வேறு பாலின வகைப்பாடு உள்ளவர்களின் மீது காட்டப்படும் வெறுப்­பு­ணர்­வுக்கு எதி­ரான அனைத்­து­லக நாளைக் குறிக்க அந்த நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

சென்ற ஆண்­டும் அந்­நா­ளைக் குறிக்க சிங்­கப்­பூ­ரில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கமும் ஊகச்சாகா அமைப்பும் அத்­த­கைய கருத்­த­ரங்கை நடத்­தி­யி­ருந்­ததன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!