கப்பல் சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தின் முக்குளிப்பாளர் கண்காணிப்பாளர் ஒருவருக்கு நேற்று நீதிமன்றம் இரண்டு ஆண்டுச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
அவரிடம் பணிபுரிந்த முக்குளிப்பாளர் ஒருவர் பாதுகாப்புக் குறைபாடுகளால் இறந்தார்.
கடலுக்குள் முக்குளிக்க 2 முக்குளிப்பாளர்களை அனுப்புவது ஆபத்தானது என்று அறிந்தும் இ்த்திட்டத்தை முன்மொழிந்தார்.
முக்குளிப்பாளர் சீட் சூன் ஹெங் என்பவர் கடலுக்குள் முக்குளிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் பாதுகாப்புக் குறித்து அறிவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த காணொளி மூலம் கண்காணிக்கத் தவறிவிட்டார்.
முக்குளிப்பாளர் கடலுக்குள் இருந்து உதவிகோரி கதறியதை இவர் கவனிக்கத் தவறிவிட்டார்.
திரு சீட் மரணமடைய காரணமாக இருந்த கண்காணிப்பாளரான ரேடன் ரோஸ்லான் முகமதுவுக்கு உதவிய குற்றச்சாட்டை நீதிமன்ற விசாரணையில் ஸல்கர்னைன் ஒத்துக்கொண்டார். அத்துடன் 2017ம் ஆண்டு இறுதியில் இந்த வேலையில் சேர்வதற்கு, போலிச் சான்றிதழ்கள், அடையாளங்களை அளித்ததாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டார்.
ஸல்கர்னைன் தகுதியான முக்குளிப்பாளராக இருந்தாலும் அவர் போலிச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து முக்குளிப்பாளர் கண்காணிப்பாளராகப் பணியில் சேர்ந்தார்.
ரேடன் ரோஸ்மானுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி, நண்பகல் நேரத்தில் மேற்பார்வையாளர் ரேடன் கேட்டுக்கொண்டதால் திரு சீட், கடலுக்குள் முக்குளித்து கப்பலின் ஒரு பகுதியைச் சுத்தம் செய்தார்.
அப்போது நீரோட்டத்தில் சிக்கிக்கொண்ட திரு சீட் உதவி கேட்டு கதறியதை ஸல்கர்னைன், திரையில் பார்க்கத் தவறிவிட்டார் என்று கூறப்பட்டது.

