இந்தோனீசியத் தொழிலதிபர் கிறிஸ் விலுவன் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நேற்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் கேஎஸ் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான திரு கிறிஸ், பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொண்டார். அதனையடுத்து நீதிமன்றம் அவரது நிறுவனத்துக்கு $480,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
பாதுகாப்பு மற்றும் வருநிலை வணிகச் சட்டத்தை மீறியதாக அவர் மீது 112 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவரது நிறுவனம் கடல்சார்ந்தும் கடலுக்கு அப்பாலும் வர்த்தகத்தில் ஈடுபட்டது. அப்போது தவறான முறையில் சட்டத்திற்கு விரோதமாகவும் பங்குப் பரிவர்த்தனைகள் தொடர்பான மோசடிப் பத்திரங்கள் கையாளப்பட்டதன் தொடர்பிலும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்தோனீசியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் திரு கிறிஸ் விலுவன் 40வது இடத்தில் உள்ளதாக 2009ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட செல்வந்தர் பட்டியலில் செய்தி வெளியிட்டிருந்தது.

