பெண் மரணம்: அண்ணன் மீதான குற்றச்சாட்டு கடுமையாகலாம்

பெண் மரணம்: அண்ணன் மீதான குற்றச்சாட்டு கடுமையாகலாம்

2 mins read
c3959692-c2d8-4447-bdd7-ba094ee6fc68
-

மரணமடைந்த பதின்ம வயது பெண்­ ஒருவரைக் கடுமையாக காயப்படுத்தியதாகக் கூறப்படும் அவ­ரது அண்ணன் மீது கூடுதல் குற்­றச்­சாட்டுகள் சுமத்தப்படக்கூடும்.

19 வயது ஹுவாங் பாவ்­யிங்கை கடு­மை­யா­கத் தாக்­கி­ய­ ஒரு குற்­றச்­சாட்டைத் தற்போது எதிர்­நோக்­கு­கி­றார் அவ­ரது அண்­ணன் ஹுவாங் பாவ்­சான்.

பெண்­ணின் உடல்­கூறு பரி­சோ­தனை முடி­வு­கள் இன்­னும் வெளி­வ­ர­வி­ல்லை என்­றும் அவ­ரது மர­ணத்­துக்­கான கார­ணம் உறு­தி­யா­னால், அவ­ரது அண்­ணன் இன்­னும் கடு­மை­யான குற்­றச்­ச­சாட்டை எதிர்­நோக்­க­லாம் என்­றும் நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன், ஹுவாங் பாவ்­சான் மீது தவ­றாக அடைத்­து­வைத்­தல் உட்­பட கூடு­தல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­ப­ட­லாம் என்று போலிஸ் தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

29 வயது ஹுவாங் பாவ்­சான்­னும் இன்­னும் இரு­வ­ரும் சேர்ந்து அந்­தப் பெண்ணை, கிளி­மெண்டி வெஸ்ட் ஸ்ட்­ரீட் ஒன்­றில் மே 4ம் தேதி இரவு 11 அள­வில் மரக்­கம்­பால் அடித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதன் தொடர்­பில், சிங்­கப்­பூ­ர­ரான லிம் பெங் தியோங், 62, சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான சீ மெய் வான், 41 இரு­வர் மீதும் கடு­மை­யா­கக் காயப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. குற்­றம் சாட்­டப்­பட்ட லிம், சீ இரு­வ­ருக்­கும் மாண்ட பெண்­ணுக்­கு­மான உறவு பற்றி தக­வல் ஏதும் இல்லை.

மூவர் மீதான வழக்கு மீண்­டும் வரும் 25ம் தேதி நீதி­மன்­றத்­தில் விசா­ரிக்­கப்­படும்.

வேண்­டும் என்றே கடு­மை­யாக காயப்­ப­டுத்­திய குற்­றத்­துக்கு, குற்­றம் புரி­வோ­ருக்கு பத்­தாண்­டு­கள் வரை­யி­லான சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது அனைத்­துமே விதிக்­கப்­பட்­ட­லாம்.

சீ ஒரு பெண் என்­ப­தால் அவ­ருக்கு பிரம்­படித் தண்டனையை விதிக்க முடி­யாது.