'முதலாளிகள், ஊழியர்கள் குறுகியகால வலியை தாங்கவேண்டும்'

'முதலாளிகள், ஊழியர்கள் குறுகியகால வலியை தாங்கவேண்டும்'

2 mins read
11497925-dd25-405b-b8da-d22b560f80bf
-

கொவிட்-19 பர­வ­லுக்கு எதி­ரான புதிய கட்­டுப்­பா­டு­கள் தரும் "குறு­கி­ய­கால வலி­யைத்" தாங்­கிக்­கொண்டு முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் தியா­கங்­கள் செய்­தால்­தான் வர்த்­த­கங்­க­ளை­யும் வேலை­க­ளை­யும் காப்­பாற்ற முடி­யும் என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னம் கூறி­யுள்­ளது.

அண்­மைய நட­வ­டிக்­கை­கள் வர்த்­த­கங்­க­ளைப் பாதிக்­கும் என்று சம்­மே­ள­னம் நேற்று விடுத்த அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது. குறிப்­பாக, சுற்றுலாக்கள், பொழு­து­போக்கு, கட்­டு­மா­னம், உணவு பானம், விருந்­தோம்­பல், கடல்­துறை, சில்­லறை வர்த்­த­கம், உற்­பத்தி செய்­முறை ஆகிய துறை­கள் பாதிக்­கப்­படும் என்று அது கூறியது.

அண்­மை­யக் கட்­டுப்­பா­டு­கள் அவ­சி­ய­மா­னவை என்­பது முத­லா­ளி­க­ளுக்­குப் புரி­யும். ஆனா­லும், வர்த்­த­கங்­க­ளின் வரு­வாய் இவற்­றால் குறை­யும். அதே வேளை­யில் செல­வு­களில் மாற்­ற­மி­ருக்­காது. வர்த்­த­கச் செயல்­பா­டு­கள் குறை­வ­தால், தற்­கா­லி­க­மாக தேவைக்­கும் அதி­க­மான ஊழி­யர்­கள் இருக்­கும் நிலை ஏற்­பட­லாம் என்று சம்­மே­ள­னம் கூறி­யது.

தேசிய சம்­பள மன்­றத்­தின் வழி­காட்­டி­க­ளின்­படி நடந்து, தேவைக்­கும் அதி­க­மான ஊழி­யர்­க­ளை­யும் அவர்­க­ளுக்­கான சம்­ப­ளச் செல­வு­க­ளை­யும் முத­லா­ளி­கள் பொறுப்­பு­டன் சமா­ளிக்க வேண்­டும் என்று சம்­மே­ள­னம் வர்த்­த­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யது.

கடந்த ஆண்டு அக்­டோ­ப­ரில் வழி­காட்­டி­களை வெளி­யிட்ட தேசிய சம்­பள மன்­றம் கடந்த வாரம் அதில் திருத்­தங்­க­ளைச் செய்­தது.

கொவிட்-19 பாதிப்­பி­லி­ருந்து மீண்­டு­வ­ரும் அல்­லது வளர்ச்சி அடை­யும் நிறு­வ­னங்­கள் ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளங்­களை பழைய நிலைக்கு ஏற்றி, அவர்­க­ளுக்கு நியா­ய­மான மாறு­வி­கித போனஸ் வழங்கி, புதி­ய­வர்­களை வேலைக்கு சேர்க்க வேண்­டும் என்று சம்­பள மன்­றம் கூறி­யி­ருந்­தது.

செல­வு­கள் வெகு அதி­க­மாக இருக்­கும் நிறு­வ­னங்­கள், வேறு எல்லா வழி­க­ளி­லும் செல­வைக் குறைத்­தி­ருந்­தால், வேலை­க­ளைக் காப்­பாற்ற ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளங்­களைத் தற்­கா­லி­க­மாக குறைக்­க­லாம் என்று மன்­றம் கூறியி­ருந்­த­தைச் சம்­மே­ள­னம் சுட்­டிக்­காட்­டி­யது.

இக்­கா­ல­கட்­டத்­தில் வேலைக்­குச் செல்ல முடி­யாத ஊழி­யர்­க­ளுக்­கான சம்­ப­ளங்­க­ளைப் பற்றி அவர்­க­ளோ­டும், தொழிற்­சங்­கங்­க­ளோ­டும் கலந்து பேசி ஏற்­பாடு செய்­யும்­ப­டி­யும் சம்­மே­ள­னம் முத­லா­ளி­களை அறி­வு­றுத்­தி­யது. அத்­த­கைய ஊழி­யர்­களை, மேம்­ப­டுத்­தப்­பட்ட வேலை ஆத­ர­வுத் திட்­டத்­தின் கீழ் பயிற்­சிக்கு அனுப்­ப­லாம் என்­றது சம்­மே­ள­னம். ­திட்­டம் ஊழி­யர்­க­ளுக்­குச் சம்­பள உத­வி­யையும் பயிற்­சிக் கட்­ட­ணக் கழி­வையும் அளிக்கிறது.