கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

1 mins read
6cfc08c3-d28b-4f8d-967c-de4b2f847c3c
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதை அந்த எட்டு பேரும் ஒப்புக்கொண்டனர். படங்கள்: பூ ஹுவி யான்/ஃபேஸ்புக் -

கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய வெளிநாட்டினர் எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அந்த எட்டு பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

அந்த எட்டு பேரும் இன்று (மே 20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். அவர்களுக்குத் தலா $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

26 வயது அனபெல் மோர்கன் டியூக், 27 வயது ஃபிலிப் எட்வர்ட் நாட்ச்புல் ஹோல்ம்ஸ், 27 வயது மார்க் அலெக்சாண்டர் பெலமி, 30 வயது ஏமி ஜியோர்ஜினா ஹன்ட், 30 வயது தாமஸ் கத்பர்ட் வில்லியம்ஸ்-ஜோன்ஸ், 31 வயது ஒலிவர் ஃபிரான்சிஸ் வில்லியம் கேம்பல், 32 வயது பெஞ்சமின் டேவிட் வாட்டர்ஸ், 32 வயது ஏமி அலெக்சாண்டிரா ஸ்டீவர்ட் ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான லசாரஸ் தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் படகு ஒன்றில் ஒன்றுகூடினர். அந்தப் படகில் மொத்தம் 10 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்