அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டுக்குள் வருகையாளர்களுக்கு அனுமதியில்லை

அலெக்சாண்டிரா மருத்துவமனை வார்டுக்குள் வருகையாளர்களுக்கு அனுமதியில்லை

2 mins read
78177eb7-11e2-4d39-83e9-761bd578943d
அலெக்சாண்டிரா மருத்துவமனை ஊழியருக்கு கொவிட்-19 இருப்பதாக அறிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­மனை வார்டு ஒன்­றில் அடிப்­படை தாதி­மைப் பரா­ம­ரிப்பு வழங்­கிய 24 வயது சிங்­கப்­பூ­ரர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 இருப்­பது உறு­தி­யா­னதை அடுத்து அந்த வார்­டுக்­குள் வரு­கை­யா­ளர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று அந்த மருத்­து­வ­மனை தெரி­வித்­துள்­ளது.

சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்த புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் தொடர்பு கண்­ட­றி­யப்­ப­டாத நான்கு நோயா­ளி­களில் அந்த மருத்­து­வ­மனை ஊழி­ய­ரும் அடங்­கு­வார்.

வார்டு பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த அந்த மருத்­து­வ­மனை ஊழி­யர், தனி­ந­பர் பாது­காப்­புச் சாத­னங்­கள் தொடர்­பான வழி­காட்­டு­தல்­க­ளைப் பின்­பற்­றி­னார் என்­றும் மருத்­து­வ­மனை அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட அந்த ஊழி­ய­ரு­டன் அணுக்­க­மான தொடர்­பில் இருந்­த­வர்­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளது எச்­சில், சளி மாதி­ரி­கள் திரட்­டப்­பட்டு வரு­வ­தால், வரு­கை­யா­ளர்­கள் அக்­கு­றிப்­பிட்ட வார்­டுக்­குள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கூறப்­பட்­டது.

இதை­ய­டுத்து, மருத்­து­வ­ம­னை­யில் தங்­கி­யி­ருந்த 31 நோயா­ளி­களும் அங்கு வேலை பார்க்­கும் 58 ஊழி­யர்­களும் தங்­க­ளின் பரி­சோ­தனை மாதி­ரி­களை வழங்­கி­விட்­ட­தாக மருத்­து­வ­மனை பேச்­சா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர், 10 நாட்­க­ளாக விடுப்­பில் இருந்­து­விட்டு திங்­கட்­கி­ழ­மை­யன்று வேலைக்­குத் திரும்­பி­னார்.

அன்று காலை, வழக்­க­மாக மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­படும் கண்­கா­ணிப்­புப் பரி­சோ­த­னைக்கு அவர் சென்­றி­ருந்­தார். ஆனால் அப்­போது, தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் ஏதும் அவ­ரி­டம் காணப்­ப­ட­வில்லை.

இருப்­பி­னும், சில மணி நேரத்­தில் அவ­ருக்கு இரு­மல் ஆரம்­பித்­தது. மறு­நாள் வெளி­வந்த அவ­ரது பரி­சோ­தனை முடிவு, தெளி­வற்ற நிலை­யில் இருந்­த­தால் அவர் உடனே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

இரண்­டா­வது பரி­சோ­த­னை­யில் அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

இதற்­கி­டையே, 19 மருத்­து­வ­மனை ஊழி­யர்­க­ளுக்­கும் ஒன்­பது நோயா­ளி­க­ளுக்­கும் தனிமை உத்­தரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஊழி­ய­ரு­டன் இவர்­கள் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில், வரு­கை­யா­ளர்­கள் மட்­டு­மன்றி புதி­தாக அந்த வார்­டில் நோயா­ளி­களும் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மாட்­டார்­கள் என்று கூறப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னை­யின் தனிமை அறை ஒன்­றில் பாதிக்­கப்­பட்ட ஊழி­யர் தங்கி இருக்­கி­றார் என்­றும் அவர் நல­மாக உள்­ளார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.