போலி ஃபேஸ்புக் விளம்பரம் குறித்து எஸ்ஐஏ எச்சரிக்கை

போலி ஃபேஸ்புக் விளம்பரம் குறித்து எஸ்ஐஏ எச்சரிக்கை

1 mins read
95541942-e9cb-43d8-bfbf-cf857cea5065
-

இல­வ­ச­மாக மரினா பே சேண்ட்ஸ் ஹோட்­ட­லில் தங்­கும் சலு­கையை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) வழங்­கு­வ­தா­கக் கூறும் ஃபேஸ்புக் பதிவு ஒன்று உண்­மை­யல்ல என்று நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

'எஸ்­ஐஏ' சின்­னம் தாங்­கிய 'சிங்­கப்­பூர் ஏர்­லைன்' என்ற ஃபேஸ்புக் கணக்­கு­வழி அந்த விளம்­ப­ரம் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

ஃபேஸ்புக் தளத்­தின் விளம்­ப­ரப் பகு­தி­களில் அது இடம்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இல­வ­ச­மாக ஓர் இர­வுக்கு ஹோட்­ட­லில் தங்­க­லாம் என்று குறிப்­பி­டும் அந்த விளம்­ப­ரத்­தில் இணைப்பு ஒன்று உள்­ளது.

அதை சமூக ஊட­க­வா­சி­கள் 'கிளிக்' செய்த பின்­னர், ஹோட்­டல் சலு­கைக்கு அவர்­கள் தகு­தி­பெற, அவர்­க­ளது தனி­ந­பர் தக­வல்­கள் கேட்­கப்­படும்.

இவ்­வாறு அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத தளங்­கள் மூலம் தனி­ந­பர் தர­வு­களை வழங்­கும்­போது கவ­னம் தேவை என்று எஸ்­ஐஏ நிறு­வ­னம் எச்­ச­ரித்­துள்­ளது.

இப்­ப­திவு குறித்து அறிந்­துள்­ள­தாக குறிப்­பிட்ட எஸ்­ஐஏ, இது­போன்ற தக­வல்­க­ளைப் பொது­மக்­கள் பெறும்­போது அவற்­றைச் சரி­பார்த்­துக்­கொள்­ளு­மா­றும் போலி­சா­ரி­டம் புகார் அளிக்­கு­மா­றும் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.