வீட்-டி-லி-ருந்-த-ப-டி கல்வி கற்-க பள்-ளி-கள் தயார்நி-லை-

வீட்-டி-லி-ருந்-த-ப-டி கல்வி கற்-க பள்-ளி-கள் தயார்நி-லை-

2 mins read
9567fc67-b8f4-4734-88ff-1dcf139f73a4
வீட்டிலிருந்தபடி கற்கும் முறை கடந்த புதன்கிழமை தொடங்கியது. கடந்த செவ்வாய் அன்று மாணவர்கள் கடைசியாக பள்ளிக்குச் சென்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வீட்­டி­லி­ருந்­த­ப­டியே கல்வி கற்­பிப்­பது, கற்­பது போன்­ற­வற்­றில் சென்ற ஆண்­டை­விட இவ்­வாண்டு பள்­ளி­களும் சரி, மாண­வர்­களும் சரி நல்ல தயார்­நி­லை­யில் உள்­ள­னர் என்று பள்­ளித் தலைமை ஆசி­ரி­யர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இது சென்ற ஆண்டு நோய்ப் பர­வல் முறி­ய­டிப்­புத் திட்­டத்­தின்­போது பெற்ற அனு­ப­வத்­தின் பலன் என்று அவர்­கள் கூறினர்.

மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்­த­ப­டி கல்வி கற்க வேண்­டும் என்ற அறி­விப்பு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தான் வந்தது என்­றா­லும் பள்­ளி­கள் இதை நடை­மு­றைப்­ப­டுத்த, அனு­ப­வத்­தின் பய­னாக தயார்­நி­லை­யில் இருந்­த தாகக் கூறப்­ப­ட்டது.

இதில் வழக்­க­மான பாடங்­க­ளு­டன் தேர்வுகளுக்குப் பிந்­திய, முன்­கூட்­டியே திட்­ட­மி­டப்­பட்ட நட­வ­டிக்­கை­களும் மெய்­நி­கர் கற்­றல் முைறயில் கற்­பிக்­கப்­ப­ட­லாம் என்று விளக்­கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

'லேர்­னிங் லேப்' எனும் துணைப்பாட வகுப்­பு­களை நடத்­தும் தனி­யார் அமைப்­பின் வாயி­லாக பல தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்கு கொவிட்-19 ேநாய்த் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து நேற்று முதல் மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்­த ­ப­டியே கல்வி கற்க வேண்­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இது­பற்­றி, ஹில்­கு­ரோவ் உயர்­நி­லைப் பள்ளி தலைமை ஆசி­ரி­யர் ஏஞ்­ச­லின் டான், நன்கு நடை­மு­றைப்படுத்­தப்­பட்ட வீட்­டி­லி­ருந்­த­படி கல்வி கற்­கும் திட்­டம் தமது பள்­ளி­யில் இருப்­ப­தா­கக் கருத்துக் கூறி­னார். அத்­து­டன், இ்த்திட்­டம் தொடர்ச்­சி­யாக இவ்­வாண்டு ஏப்­ரல் 16லிருந்து இம்­மா­தம் 12ஆம் தேதி பள்­ளிக்­கா­லத்­தி­லும் நடை­முை­ற­யில் இருந்­த­தா­கக் கூறினார்.

அத்­து­டன், பள்ளி ஆசி­ரி­யர்­கள் கொடுத்த தக­வல்­க­ளின் அடிப் ­படை­யில் ஏழு மாண­வர்­க­ளுக்கு கூடு­தல் உதவி தேவைப்­ ப­டு­கிறது என்­ப­தை­யும் தமது பள்ளி கண்­ட­றிந்­த­தாக அவர் விளக்­கி­னார்.

இந்த மாண­வர்­கள் பள்­ளிக்­குத் திரும்­பு­வர் என்­றும் இவர்­களை ேமற்­பார்­வை­யிட ஒரு தனிக்குழு அமைக்கப் பட்­டுள்­ள­து என்றும் திருவாட்டி டான் சொன்னார்.