பல்கலைக்கழக பட்-ட-ம-ளிப்பு விழாக்கள் நேரடியாக இல்லை

பல்கலைக்கழக பட்-ட-ம-ளிப்பு விழாக்கள் நேரடியாக இல்லை

1 mins read
131f7fe3-c246-4340-9fc4-d18528009332
-

கொவிட்-19 கிருமித்தொற்று கூடியுள்ளதால் இங்குள்ள 2 பல்கலைக்கழகங்கள் அவற்றின் பட்டமளிப்பு விழாக்களை நேரடியாக நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அதன் பட்டமளிப்பு விழாவை இணையத்தில் நடத்தவுள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அதன் பட்டமளிப்பு விழாவை ஒத்தி வைத்துள்ளது. கொவிட்-19க்கு எதிரான அண்மைய கட்டுப்பாடுகளுக்கான கடைசி நாள் ஜூன் 13 ஆகும். அதற்குப் பின்தான் இரண்டு பல்கலைகளும் அவற்றின் பட்டமளிப்பு விழாக்களை நேரில் நடத்தத் திட்டமிட்டிருந்தன. ஆனால், கிருமித்தொற்று ஏற்படுத்தியுள்ள நிச்சயமற்ற சூழலால் திட்டத்தை மாற்றியதாக ஊழியர்கள், மாணவர்களுக்கு அனுப்பிய குறிப்பில் அவை கூறின.