அதிக அளவில் வடிகட்டும் ஆற்றலுடைய முகக்கவசத்தைத் தேர்ந்தெடுத்தல்

அதிக அளவில் வடிகட்டும் ஆற்றலுடைய முகக்கவசத்தைத் தேர்ந்தெடுத்தல்

3 mins read
b7bd4755-2731-42bd-8525-dcec3da006a3
காற்­றில் மிதக்­கும் நீர்த்­துகள்­களில் நமது சுவா­சத்­தில் கலப்­ப­தை 95% அள­வில் தடுக்கவல்ல முகக்கவசங்கள் பாதுகாப்பானவை என்று சொல்லப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­று­கள் அதி­க­ரித்து வரும் வேளை­யில், காற்­றில் மிதக்­கும் நீர்த்­து­கள்­கள் மூலம் கிருமி பர­வும் சாத்­தி­யம் உண்டு என்று ஆதா­ரங்­கள் காட்­டு­வ­தால், பொதுமக்கள் கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க வடி­கட்­டும் ஆற்­ற­லு­டைய, பாது­காப்­பான முகக்­க­வ­சங்­களை அணி­யு­மாறு மருத்­துவ நிபு­ணர்­கள் ஆலோ­சனை கூறி­யுள்­ள­னர்.

பாது­காப்­பான முகக்­க­வ­சங்­களை எவ்­வாறு தேர்ந்­தெ­டுப்­பது என்­ப­து­பற்றி நேற்­றைய ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழில் ஒரு வழி­காட்டி விளக்­கச் செய்தி வெளி­யி­டப்­பட்­டது.

அதிக ஆற்­ற­லு­டைய வடி­கட்டி என்­றால் என்ன?

காற்­றில் மிதக்­கும் நீர்த் துகள் களி­லி­ருந்து சிறந்த முறை­யில் பாது­காக்­கும் முகக்­க­வ­சத்தை வைத்து அதன் வடி­கட்­டும் ஆற்­றல் மதிப்­பி­டப்­ப­டு­கிறது.

ஒரு பாது­காப்­பான முகக்­க­வ­சம் என்­றால், அது மருத்­துவ தர­நிலை களைக் கொண்­டி­ருக்க வேண்­டும். காற்­றில் மிதக்­கும் நீர்த்­து­கள்­கள் 95% அள­வில் நமது சுவா­சத்­தில் கலப்­பதை அது தடுக்­க­வேண்­டும்.

எந்த முகக்­க­வ­சத்தை நான் அணிய வேண்­டும்?

நீங்­கள் மருத்­துவ ரீதி­யில் அங்கீ கரிக்­கப்­பட்ட முகக்­க­வ­சத்தை அணி­ய­லாம் அல்­லது மக்­கள் கழ­கம், தெமா­செக் அற­நி­று­வ­னம் ஆகி­யவை நாடு முழு­வ­தும் வழங்­கிய முகக்­க­வ­சங்­களை அணி­ய­லாம். DET முகக்­க­வ­சம், Proshield முகக்­க­வ­சம், Livinguard முகக்­க­வ­சம் ஆகி­ய­வை­யும் பொருத்­த­மா­ன­வையே. இரண்டு அடுக்கு கொண்ட துணி­யால் ஆன முகக்­க­வ­சத்­தை­யும் பயன்­ப­டுத்­த­லாம்.

எந்த முகக்­க­வ­சத்தை நான் அணி­யக்­கூ­டாது?

ஓர் அடுக்கு உள்ள முகக்­க­வ­சம் அல்­லது சுவாச வெளி­யேற்ற அடைப்­பான்­கள் உள்ள முகக்­க­வ­சத்தை அணி­யக்­கூ­டாது. மற்ற முகக்­க­வ­சங்­களில் உள்ள பாது­காப்பு அம்­சங்­கள் அவற்­றில் இல்லை. சுவாச வெளி­யேற்ற அடைப்­பான்­கள் உள்ள முகக்­க­வ­சங்­கள் புகை­மூட்­டப் பிரச்­சி­னை­யின்­போது கைகொ­டுக்­க­லாம். ஆனால், கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான ஒரு­வர் இரு­மும்­போதோ தும்­மும்­போதோ, காற்­றில் மிதக்­கும் நீர்த்­து­கள்­கள் அந்த சுவாச வெளி­யேற்ற அடைப்­பான்­கள் வழி உங்­கள் சுவா­சத்­துக்­குள் சென்­று­வி­டும் அபா­யம் உண்டு.

எனது முகக்­க­வ­சத்தை எத்­தனை நாட்­க­ளுக்கு ஒரு முறை கழுவ வேண்­டும்?

உங்­கள் சரு­மத்­தில் ஒட்­டிக்­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய நுண்­ணு­யிர்­கள் உங்­கள் முகக்­க­வ­சத்­தில் படிந்­தி­ருக்­கக்­கூ­டும் என்­ப­தால், ஒரு நாளைக்கு ஒரு முறை அதைக் கழுவ வேண்­டும். சோப்பு, இளம் சுடு­நீர் ஆகி­ய­வற்­றைக் கொண்டு கைக­ளால் முகக்­க­வ­சத்­தைக் கழுவ வேண்­டும்.

முகக்­க­வ­சங்களை எத்­தனை முறை கழுவி மீண்­டும் பயன்­ படுத்த முடியும் என்ற வழி­காட்­டிக்கு ஏற்ப, அவற்றைப் பயன்­ப­டுத்­திய பிறகு அப்­பு­றப்­ப­டுத்த வேண்­டும். கார­ணம், குறிப்­பிட்ட மறு­ப­ய­னீட்­டுக் காலத்துக்குப் பின் அவற்­றின் வடி­கட்­டும் ஆற்­றல் குறைந்­து­வி­டும்.

உதா­ர­ணத்­துக்கு, தெமா­செக் அற­நி­று­வ­னம் வழங்­கிய Livinguard முகக்­க­வ­சத்தை வாரத்­துக்கு ஒரு முறை கழுவ வேண்­டும்.

அந்த வகை­யில் தினந்­தோ­றும் அவற்றை அணிந்த பிறகு வாரத்­துக்கு ஒரு முறை கழு­வு­கி­றீர்­கள் என்று வைத்­துக்­கொள்­வோம். அவ்­வாறு 30 முறை கழு­விய பிறகு, அதா­வது ஏழு மாதங்­கள் நாள்­தோ­றும் அணிந்த பிறகு அவற்றை அப்­பு­றப்­ப­டுத்தி விட­லாம்.

நீங்­கள் விருப்­பப்­பட்­டால் ஒவ்வொரு நாளுக்குப் பின்னும் அந்த முகக்­க­வ­சத்­தைக் கழு­வ­லாம். அப்­படி செய்­தால் அதன் தாக்­குப்­பி­டிக்­கும் தன்மை குறைந்து விடும்.

உருமா­றிய கிரு­மி­கள் பரவி வரு­வ­தால், நான் 2 முகக்

கவ­சங்­களை அணி­ய­லாமா?

தேவை­யில்லை. நீங்­கள் நல்ல, தர­மான, மூக்­கை­யும் வாயை­யும் மூடக்கூடிய முகக்­க­வ­சத்­தைப் பயன்­ப­டுத்தி வந்­தால் போது­மா­னது.

நீங்­கள் மூடப்­பட்ட இடத்­துக்கோ கூட்ட நெரி­சல் உள்ள இடங்­ களுக்கோ செல்­வ­தாக இருந்­தால், மருத்­துவ ரீதி­யி­லான முகக்­க­வ­சத்­தை அல்­லது வடி­கட்­டி­கள் உள்ள ஈர­டுக்கு கொண்ட துணி­யால் ஆன முகக்­க­வசத்தை அணிந்து செல்­வது சிறந்­தது.

உங்­க­ளு­டன் ஒரு­வர் மட்­டுமே உடன் செல்­வ­தை­யும் அத்­தி­யா­வ­சிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு மட்­டுமே செல்­வ­தை­யும் உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­ளுங்­கள்.