'சிங்கப்பூர் கிருமி' பொய்ச் செய்திக்கு எதிராக நடவடிக்கை

'சிங்கப்பூர் கிருமி' பொய்ச் செய்திக்கு எதிராக நடவடிக்கை

2 mins read
de23df7a-617f-4e9d-9880-93054bf49b0f
-

சிங்­கப்­பூ­ரில் உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை உரு­வா­கி­யி­ருப்­ப­தாக இணை­யத்­தில் வலம் வரும் செய்­தி­க­ளுக்கு எதி­ராக பொஃமா எனப்­படும் இணை­யம்­வழி பொய்ச்­செய்­திக்­கும் சூழ்ச்­சித் திறத்­துக்­கும் எதி­ரான பாது­காப்­புச் சட்­டத்தை சுகா­தார அமைச்சு பயன்

­ப­டுத்­தி­யுள்­ளது.

பொய்ச் செய்­தி­யைத் திருத்­தும்­படி எஸ்­பி­எச் சஞ்­சி­கை­க­ளுக்­குச் சொந்­த­மான ஃபேஸ்புக் பக்­கம், டுவிட்­டர், ஹார்ட்­வேர்­ஸோன் தளம் ஆகி­ய­வற்­றுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

"சிங்­கப்­பூ­ரில் புதி­தாக உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை உரு­வா­கி­யி­ருப்­ப­தா­க­வும் சிங்­கப்­பூ­ரி­

லி­ருந்து இந்­தி­யா­வுக்கு அது பர­வும் அபா­யம் இருப்­ப­தா­க­வும் பல ஊட­கங்­க­ளி­லும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் செய்தி வெளி­யிட்­டி­ருப்­பது குறித்து எங்­க­ளுக்­குத் தெரி­யும்.

"அண்­மைய வாரங்­களில் சிங்­கப்­பூ­ரில் அதி­க பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பது பி1617 வகை கிரு­மி­யா­கும். இது இந்­தி­யா­வில் உரு­வா­னது," என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது."

சிங்­கப்­பூ­ரில் புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை உரு­வா­கி­யி­ருப்­ப­தற்­கான ஆதா­ரம் ஏதும் இல்லை என்று அமைச்சு கூறி­யது.

அது­மட்­டு­மல்­லாது, சிறா­ரின் உயி­ருக்கு ஆபத்து விளை­விக்­கக்­கூ­டிய கொவிட்-19 வகை கிருமி இருப்­ப­தற்­கான ஆதா­ர­மும் இல்லை என்று அது வலி­யு­றுத்­தி­யது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சிங்­கப்­பூ­ரில் புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிருமி வகை உரு­வா­கி­யி­ருப்­ப­தா­க­வும் அதன் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் மூன்­றா­வது அலை பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் அண்­மை­யில் டெல்லி முத­ல­மைச்­சர் அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­தி­ருந்­தார்.

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரும் விமா­னங்­க­ளுக்­குத் தடை விதிக்­கும்­படி அவர் இந்­திய அர­சுக்கு அழைப்பு விடுக்­கும் வகை­யில் டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார்.

திரு கெஜ்­ரி­வா­லின் இந்­தக் கருத்­து­களை என்­டி­டிவி போன்ற இந்­திய ஊட­கங்­கள் ஒளி­ப­ரப்­பின. சில இந்­திய நாளி­தழ்­களும் பிர­சு­ரித்­தன. திரு கெஜ்­ரி­வால் கூறி­ய­தில் துளி­ய­ள­வு­கூட உண்­மை­யில்லை என்­றும் சமூக வலைத்­த­ளங்­களில் அவர் அது­போன்ற கருத்­து­களை வெளி­யிட்­டது முறை­யல்ல என்­றும் சுகா­தார அமைச்சு வருத்­தம் தெரி­வித்­துள்­ளது.