கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மீறிய எட்டு பேருக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய தடை

2 mins read
ef6f88c7-293f-4b80-8d7a-9bb768d790fa
கட்டுப்பாடுகளை மீறி படகில் நடந்த ஒன்றுகூடல். படம்: சாவ்பாவ் -

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட விதி­மு­றை­களை மீறிய எட்டு வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் வேலை செய்ய தடை விதிக்­கப்­பட்­டது. அந்த எட்டு பேர் பிரிட்­ட­னைச் சேர்ந்­த­வர்­கள்.

அந்த எட்டு பேரும் நேற்று நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை மீறி­ய­தை அவர்­கள் ஒப்­புக்­கொண்­ட­னர். அவர்­க­ளுக்­குத் தலா $3,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

26 வயது அன­பெல் மோர்­கன் டியூக், 27 வயது ஃபிலிப் எட்­வர்ட் நாட்ச்­புல் ஹோல்ம்ஸ், 27 வயது மார்க் அலெக்­சாண்­டர் பெலமி, 30 வயது ஏமி ஜியோர்­ஜினா ஹன்ட், 30 வயது தாமஸ் கத்­பர்ட் வில்­லி­யம்ஸ்-ஜோன்ஸ், 31 வயது ஒலி­வர் ஃபிரான்­சிஸ் வில்­லி­யம் கேம்­பல், 32 வயது பெஞ்­ச­மின் டேவிட் வாட்­டர்ஸ், 32 வயது ஏமி அலெக்­சாண்­டிரா ஸ்டீ­வர்ட் ஆகிய ஆறு பேரும் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் சிங்­கப்­பூ­ருக்­குச் சொந்­த­மான லசா­ரஸ் தீவுக்கு அரு­கில் உள்ள கடற்

­ப­கு­தி­யில் படகு ஒன்­றில் ஒன்­று­கூ­டி­னர். அந்­தப் பட­கில் மொத்­தம் 10 பேர் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

சமூக ஒன்­று­கூ­டல்­களில் அதி­க­பட்­சம் ஐந்து பேர் மட்­டுமே கலந்­து ­கொள்ள முடி­யும் என்ற விதி­முறை அப்­போது நடப்­பில் இருந்­தது. ஆனால் அந்­தப் பட­கில் பத்து பேர் இருந்­த­னர். மேலும் அவர்­கள் முகக்­க­வ­சம் அணி­ய­வில்லை.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 26ஆம் தேதி காலை 11 மணி அள­வில் செந்­தோ­சா­வில் உள்ள கோவ் அவென்யூ மரி­னா­வில் பட­கின் இரு சிப்­பந்­தி­களை அந்­தப் பத்து பேரும் சந்­தித்­த­னர்.

படகு புறப்­ப­டு­வ­தற்கு முன்பு அந்­தப் பத்து பேரை ஐந்து பேர் கொண்ட இரு குழுக்­க­ளா­கப் பிரி­யும்­படி படகு சிப்­பந்­தி­கள் கேட்­டுக்­கொண்­ட­னர்.

இரு குழுக்­க­ளுக்­கி­டையே எவ்­வித தொடர்­பும் இருக்­கக்­கூ­டாது என்­றும் உண­வ­ருந்­தா­த­போது, தண்­ணீர் குடிக்­கா­த­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும் என்­றும் அந்த பத்து பேருக்கு நினை­வூட்­டப்­பட்­டது.

ஆனால் படகு லசா­ரஸ் தீவுக்கு அரு­கில் இருந்­த­போது அந்த பத்து பேரும் முகக்­க­வ­சம் அணி­யா­மல் நட­னம் ஆடி­யதை மற்­ற­வர்­கள் பார்த்­த­னர். அந்த பத்து பேரும் விதி­மு­றை­க­ளுக்கு உட்­ப­டா­மல் நடந்­து­கொண்­ட­தைக் காட்­டும் படங்­களும் காணொ­ளி­களும் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்­டன.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­களை மீறு­வோ­ருக்கு ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் $10,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம். விதி­மு­றை­க­ளைத் தொடர்ந்து மீறு­வோ­ருக்கு ஓராண்டு வரை சிறைத் தண்­ட­னை­யும் $20,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.