பணம் திருட பெண்ணுக்கு உடந்தையாக இருந்த இரட்டை சகோதரர்களுக்குச் சிறை

பணம் திருட பெண்ணுக்கு உடந்தையாக இருந்த இரட்டை சகோதரர்களுக்குச் சிறை

3 mins read
9ff851ef-19a6-4446-ab92-0048587e2e54
(இடமிருந்து) ஓ ஜியா செங், ஓ ஜியா காய், டிஃபனி டான் ஹுவீ சுவான். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 3

சொந்த குடும்­பத்­தா­ரி­ட­மி­ருந்து $57,000க்கும் அதி­க­மான தொகை­யைத் திருட 22 வயது டிஃபனி டான் ஹுவீ சுவான் திட்­டம் போட்­ட­தைத் தொடர்ந்து, அவ­ருக்கு உடந்­தை­யாக இருந்து செயல்­பட்­டார் அவ­ரது காத­ல­ரான 25 வயது ஓ ஜியா காய்.

பணம் திருட ஓ ஜியா காயின் இரட்­டை சகோ­த­ரர் ஓ ஜியா செங்­கும் உத­வி­னார்.

திருட்­டுக் குற்­றத்­துக்கு உடந்­தை­யாக இருந்த ஓ ஜியா காய்க்கு 15 வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவ­ரது சகோ­த­ர­ருக்கு ஒன்­பது வார சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

22 வயது டானுக்கு நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்­புத் தண்­டனை விதிப்­பது குறித்து ஆரா­யப்­ப­டு­கிறது.

வீட்­டிற்­குள் திரு­டர்­கள் புகுந்து பணத்தை திரு­டி­விட்­ட­தாக குடும்­பத்தை நம்­ப­வைக்க டான் திட்­ட­மிட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தங்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை மூவ­ரும் கடந்த மாதம் ஒப்­புக்­கொண்­ட­னர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி­யன்று தமது தந்­தை­யும் சகோ­த­ர­ரும் வீட்­டில் இல்­லாத சம­யத்­தில் தமது திட்­டத்­தை டான் செயல்­ப­டுத்­தி­னார்.

ஓ ஜியா காயு­டன் வெளியே சாப்­பி­டப் போக­லாம் என்று தமது தாயா­ரி­டம் கூறி, அவ­ரு­டன் டான் புறப்­பட்­டார்.

காரில் ஏறி­ய­தும் கைபே­சியை வீட்­டி­லேயே வைத்­து­விட்­ட­தா­கக் கூறி வீட்­டிற்­குச் சென்­றார் டான்.

அங்கு அவ­ருக்­காக ஓ ஜியா செங் காத்­துக்­கொண்­டி­ருந்­தார். வீட்­டிற்­குள் புகுந்த டான் தமது சகோ­த­ர­ரின் பாது­காப்­புப் பெட்­ட­கத்­தைத் திரு­டி­னார். அதில் $11,500 பெறு­மா­ன­முள்ள ரோலெக்ஸ் கைக்­க­டி­கா­ரம், இரண்டு தங்க மோதி­ரங்­கள், ரொக்­கம் முத­லி­யவை இருந்­தன.

அது­மட்­டு­மல்­லாது, தமது தந்­தை­யின் பையி­லி­ருந்து கடித உறை ஒன்றை டான் திரு­டி­னார். அதில் $34,000 ரொக்­கம் இருந்­தது.

வீட்­டில் இருந்து விலை­மிக்க பை ஒன்­றை­யும் அவர் திரு­டி­னார்.

விட்­டிற்குள் திரு­டர்­கள் புகுந்து திரு­டிய கதையை மேலும் வலுப்­

ப­டுத்த தமது சகோ­த­ர­ரின் அறை­யில் இருந்த உண்­டி­ய­லிலி­ருந்து அனைத்­துப் பணத்­தை­யும் டான் திரு­டி­னார்.

டான் வாட­கைக்கு எடுத்த காருக்­குள் திரு­டிய பொருட்­களை வைக்க ஜியா செங் உத­வி­னார்.

சில மணி நேரத்துக்குப் பிற­கு வீட்­டில் இருந்த பொருட்­கள் மாய­மா­னதை உணர்ந்த டானின் தந்­தை­யும் சகோ­த­ர­ரும் போலி­சாரை அழைத்­த­னர்.

தம்­மீது சந்­தே­கம் எழா­மல் இருக்க தமது பையி­லி­ருந்த $3,000 ரொக்­கத்­தை­யும் காண­வில்லை என்று டான் பொய் கூறி­னார்.

திரு­டிய பொருட்­கள் மூலம் கிடைத்த பணத்­தி­லி­ருந்து டானின் பிறந்­த­நாளை முன்­னிட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் தேதி­யன்று அவ­ருக்கு $3,150 மதிக்­கத்­தக்க பை ஒன்றை ஜியா காய் வாங்­கி­னார். அந்­தப் பைக்­குள் $7,100 ரொக்­கம் வைத்து டானுக்கு அவர் பரி­ச­ளித்­தார்.

இதற்­கி­டையே, டான் வசிக்­கும் கட்­ட­டத்­தின் மின்­தூக்­கி­யி­லி­ருந்து ஜியா செங் இரண்டு கன­மான பைக­ளைத் தூக்­கிக்­கொண்டு வெளி­யே­றி­ய­தை போலி­சா­ரின் கண்­கா­ணிப்பு கேமரா காட்­டி­யது.

இதை­ய­டுத்து, மூவ­ரும் அதி­கா­ரி­க­ளி­டம் சிக்­கி­னர்.

டான் இது­வரை $6,900ஐ தமது குடும்­பத்­தாரிடம் திருப்பித் தந்துள்ளார். டானுக்கு குறைந்­தது ஆறு மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட வேண்­டும் என்று அர­சாங்க வழக்­க­றி­ஞர் முதலில் கேட்­டுக்­கொண்­டார். ஆனால் குற்­றம் நிகழ்ந்­த­போது டானுக்கு 21 வயது.

எனவே, அவ­ருக்­குக் நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு தண்­டனை விதிக்க நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் 16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டோருக்குப் பொதுவாக நன்னடத்தைக் கண்காணிப்புத் தண்டனை விதிக்கப்படும்.

அவ்வாறு செய்வதன் மூலம் குற்றம் புரிந்தவர் என்ற பதிவு அவர்களுக்கு இருக்காது.