'சில்லறை வர்த்தகத் துறைக்கு கூடுதல் உதவி தேவை'

'சில்லறை வர்த்தகத் துறைக்கு கூடுதல் உதவி தேவை'

1 mins read
c1d2f4df-d0e7-4e0f-9aa8-16e3d284c7cf
-

கொவிட்-19 நெருக்கடிநிலையின் காரணமாக சிங்கப்பூரில் பல வர்த்தகங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள கடைக்காரர்களுக்கு உதவும் வகையில் கடைகளின் சொந்தக்காரர்கள் கூடுதல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இம்மாதம் 16ஆம் தேதியிலிருந்து ஜூன் மாதம் 13ஆம் தேதி வரை விதிக்கப்பட்டுள்ள மேலும் கடுமையான கட்டுப்பாடு களால் வர்த்தக ரீதியாக ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க தங்களிடம் வாடகை செலுத்தும் கடைக்காரர்களுக்கு உதவ குறைந்தது ஐந்து கடை உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

இருப்பினும், இது போதாது என்றும் திணறிக்கொண்டிருக்கும் சில்லறை வர்த்தகத் துறைக்கு கடை உரிமையாளர்களிடமிருந்தும் அரசாங்கத்திடமிருந்தும் கூடுதல் உதவி தேவை என்று நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் கடந்த ஆண்டு நடைமுறைப் படுத்தப்பட்டபோது வாடகை நிவாரணத் தொகைகளும் வேலை ஆதரவுத் திட்டமும் வழங்கப்பட்டன.

பல நிறுவனங்களுக்கு இவை பெரும் உதவியாக இருந்தது என்று நிபுணர்கள் கூறினர். சில்லறை வர்த்தகங்களுக்குக் கூடுதல் உதவி தேவை என்று அவர்கள் தெரிவித்தனர்.