பாலஸ்தீனர்களுக்கு உதவ சிங்கப்பூரில் நிதிதிரட்டு

பாலஸ்தீனர்களுக்கு உதவ சிங்கப்பூரில் நிதிதிரட்டு

2 mins read
b019537e-848a-4346-b436-43f195975207
-

காஸா­வில் உள்ள பாலஸ்­தீ­னர்­க­ளுக்கு உதவ உள்­ளூர் அற­

நி­று­வ­ன­மான ரஹ்­மத்­தான் லில் அலா­மீன், இணை­யம் மூலம் நிதி­தி­ரட்­டும் திட்­டத்தை நாளை தொடங்க இருக்­கிறது.

அண்­மைய சில நாட்­க­ளாக இஸ்­‌ரே­லி­யப் படை­க­ளுக்­கும் ஹமாஸ் அமைப்­புக்­கும் இடை­யி­லான மோதல் தீவி­ர­ம­டைந்­துள்­ளது.

இந்த மோதல் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு திரட்­டப்­படும் நிதி பயன்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. சுகா­தார, நிவா­ரண, சமூ­கச் சேவை­க­ளுக்கு இந்த நிதி பயன்

­ப­டுத்­தப்­படும்.

"தாக்­கு­தல்­க­ளின் கார­ண­மாக காஸா­வில் பல உயி­ரி­ழப்­பு­கள் நிகழ்ந்­துள்­ளன. பலர் காய­ம­டைந்­துள்­ள­னர். அங்­குள்­ள­வர்­கள் குறிப்­பாக சிறார், ஏற்­கெ­னவே பதற்­ற­மான சூழ­லில் வாழ்ந்து கடு­மை­யாக மன­வு­ளைச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். தற்­போது நடத்­தப்­படும் தாக்­கு­தல்­க­ளால் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது.

"தற்­போ­தைய நில­வ­ரப்­படி காஸா­வில் 1.9 மில்­லி­யன் பாலஸ்­தீ­னர்­கள் உள்­ள­னர். அவர்­களில் 70 விழுக்­காட்­டுக்­கும் மேற்­பட்­டோர் அக­தி­க­ளா­கப் பதிவு செய்­யப்­பட்­ட­வர்­கள். அவர்­க­ளுக்கு உட­ன­டி­யாக மனி­தா­பி­மான உதவி தேவைப்­ப­டு­கிறது," என்று அற­நி­று­வ­னம் கூறி­யது.

அது­மட்­டு­மல்­லாது, கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யா­லும் காஸா­வில் உள்ள பாலஸ்­தீ­னர்­கள் அவ­திப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இஸ்­‌ரேலி­யப் படை­க­ளால் நடத்­தப்­பட்­டுள்ள வான்­வ­ழித் தாக்­கு­தல்­க­ளால் இது­வரை 228 பேர் மாண்­டு­விட்­ட­தாக பாலஸ்­தீன சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். இஸ்­‌ரேல் தரப்­பில் 12 பேர் மாண்­டு­விட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பேநவ் யுஇ­என் எண் 200910530ZCHQ மூலம் நன்­கொடை அளிக்­க­லாம். அவ்­வாறு பணம் அனுப்­பும்­போது காஸா என்று குறிப்­பி­ட­வும். Giving.SG இணை­யப்­பக்­கம் வாயி­லா­க­வும் Muslim.SG - RLAF - Humanitarian Aid for Gaza தளம் மூல­மா­க­வும் பணம் அனுப்­ப­லாம்.

அல்­லது ஓசி­பிசி வங்கி கணக்கு (current account) எண் 601313315001 வாயி­லா­க­வும் பணம் அனுப்­ப­லாம்.

காசோலை மூல­மா­க­வும் அற­நி­று­வ­னத்­துக்கு நன்­கொடை அளிக்­க­லாம். காசோ­லை­யில் பணம் பெறு­ப­வர் பகு­தி­யில் RLAF என்று குறிப்­பி­ட­வும். காசோ­லை­யில் பின்­பு­றத்­தில் நன்­கொ­டை­யா­ள­ரின் பெயர், தொடர்பு எண், 'காஸா' என்­றும் குறிப்­பி­ட­வும். காசோ­லையை RLAF யூசோஃப் இஷாக் பள்­ளி­வா­சல், 10 உட்­லண்ட்ஸ் டிரைவ் 17 சிங்­கப்­பூர் 737740 அல்­லது மூயிஸ், 273 பிரா­டல் சாலை சிங்­கப்­பூர் 579702 ஆகிய முக­வ­ரி­க­ளுக்கு அனுப்­பி­வைக்­க­வும்.

நிதி­தி­ரட்டு இம்­மா­தம் 30ஆம் தேதி நிறை­வ­டை­யும்.