மொத்தம் 40 கொவிட்-19 சம்பவங்கள், சமூகத்தில் 30 பேருக்குத் தொற்று

மொத்தம் 40 கொவிட்-19 சம்பவங்கள், சமூகத்தில் 30 பேருக்குத் தொற்று

1 mins read
bb034612-d1eb-4179-b726-cf8e7ae24d04
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சமூக அளவில் 30 பேர் உட்பட சிங்கப்பூரில் இன்று (மே 21) நண்பகல் நிலவரப்படி புதிதாக 40 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

சமூகத்தில் கிருமி தொற்றியவர்களில் எட்டு பேருக்கு முன்னதாக கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில்லை.

எஞ்சிய 22 பேர் முன்னதாக கிருமி தொற்றியவர்களுடன் தொடர்புடையவர்கள்.

அவர்களில் 16 பேர் ஏற்கெனவே தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டுவிட்டனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 10 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இங்கு வந்தவுடன் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் எட்டு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் புதிதாக எவருக்கும் தொற்று பதிவாகவில்லை.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 61,770 ஆக உள்ளது.