காலணி விற்பனையில் $50,000ற்கும் மேல் மோசடி செய்த ஆடவர் கைது, குறைந்தபட்சம் 15 நபர்கள் ஏமாற்றப்பட்டனர்

காலணி விற்பனையில் $50,000ற்கும் மேல் மோசடி செய்த ஆடவர் கைது, குறைந்தபட்சம் 15 நபர்கள் ஏமாற்றப்பட்டனர்

1 mins read
242d1628-09ae-4247-a6f5-fc9fe730761c
-

15 பேருக்கு மேலானோர்களிடம் கிட்டத்தட்ட $50,000 அளவில் மோசடி செய்ததன் காரணத்திற்கு 37 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஏமாறியவர்களிடமிருந்து போலிசாருக்கு இம்மாதம் சில புகார்கள் கிடைத்தது.

'கேராவ்சல்' என்ற மின்னிலக்க வர்த்தகத் தளத்தில் இணைய விற்பனையாளராக அந்த நபர் மாறுவேடம் போட்டு போலித்தனமாக காலணிகளை விற்றுக்கொண்டிருந்தார்.

இந்த காலணிகளை வாங்க 'பேநவ்'. 'பேலா' போன்ற தளங்களில் பணம் அனுப்பியவுடன் இந்த விற்பனையாளர் அதற்கான காலணிகளை அனுப்பவில்லை.

'கேராவ்சல்' நிறுவனத்துடன் காவல்துறையின் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு இணைந்து முறையான விசாரணை நடத்தினர்.

மோசடி செய்த அந்த நபரின் அடையாளத்தைக் கண்டறிந்து அவரை மே 19ஆம் தேதி போலிசார் கைது செய்தனர்.

இணைய வர்த்தகத்தில் ஈடுபடும்போது பொதுமக்கள் கவனத்துடன் இருக்கவேண்டும் என்று சிங்கப்பூர் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தி, படம்: ஸ்டாம்ப்