நாணயப் பரிமாற்றம்: சிங்கப்பூர், ஜப்பான் உடன்பாடு புதுப்பிப்பு

நாணயப் பரிமாற்றம்: சிங்கப்பூர், ஜப்பான் உடன்பாடு புதுப்பிப்பு

1 mins read
fe9b0d4e-c235-4f93-9687-927dbd20b38b
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேவை ஏற்படும்போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்களது நாணயங்களை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் உடன்பாட்டை சிங்கப்பூரும் ஜப்பானும் இன்று புதுப்பித்துக் கொண்டன.

அந்த இருதரப்புப் பரிமாற்ற உடன்பாட்டின்படி, மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் (S$4 பி.) வரையிலான அல்லது அதற்கு நிகரான மதிப்புக்கு ஈடான சிங்கப்பூர் வெள்ளியைக் கொடுத்து,

ஜப்பானிடம் இருந்து ஜப்பானிய யென்னை சிங்கப்பூர் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வரைக்கும் ஜப்பானிய யென்னைக் கொடுத்து, சிங்கப்பூரிடம் இருந்து சிங்கப்பூர் வெள்ளியை ஜப்பான் பெற்றுக்கொள்ள முடியும்.