சமூகத்தில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, தடுப்பூசி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி போடப் பெயரைப் பதிவுசெய்து கொள்ளும் ஒருவரிடம், அண்மையில் அவர் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்று வந்தாரா எனக் கேட்கப்படுகிறது.
கெபுன் பாரு சமூக மன்றத்தில் அமைந்துள்ள தடுப்பூசி மையப் பணியாளர்கள் தங்களது முகக்கவசங்களுக்கு மேல் முகமூடி அணிந்திருந்ததாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தி கூறியது.
குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவோர்க்காக காத்திருப்புப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இயூ டீ, செஞ்சா -கேஷ்யூ சமூக மன்றங்களில் செயல்படும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தோர்க்கு இலவச முகக்கவசம் வழங்கப்பட்டது.

