தொடர்பில்லா தொற்று கூடுகிறது; கவலை அதிகரிக்கிறது

தொடர்பில்லா தொற்று கூடுகிறது; கவலை அதிகரிக்கிறது

1 mins read
96262a6d-9714-4ea7-a5d4-44dba235feb1
படம்: புளும்பெர்க் -

சிங்கப்பூரில் தொடர்பு இல்லாத கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் இந்த மாதம் சீராக அதிகரித்து வந்துள்ளன.

சமூகத்தில் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் மேலும் பலருக்கும் தொற்று இருக்கக்கூடுமோ என்ற கவலை இதனால் கூடிவருகிறது.

இந்த மாதம் 7ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை, கிருமி தொற்றிய நோயாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் உள்ளூரில் 75 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இந்த எண்ணிக்கை, தொற்று கூடியதற்கு முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மொத்தம் 68 ஆக இருந்தது.

இத்தகைய தொடர்பு இல்லாத தொற்றுகளின் அன்றாட சராசரி எண்ணிக்கை, இந்த ஆண்டு தொடக்கத்தில் இறங்குமுகமாக இருந்தது.

ஆனால் சென்ற மாதம் இது கூடியது. பிறகு இந்த மாதத்தில் அதிகமாகிவிட்டது.

சமூகத்தில் தொடர்பு இல்லா தொற்றுகள் அதிகமாகி வருவதை அடுத்து சிங்கப்பூரில் மற்றொரு முடக்கம் நடப்புக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சிலர் கருதுகிறார்கள்.

இப்படி தொடர்பு இல்லாமல் ஏற்படக்கூடிய தொற்று பற்றி கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு இணைத் தலைவர் லாரன்ஸ் வோங் மே 18ஆம் தேதி குறிப்பிட்டு இருந்தார்.