தனியார் வாடகை கார், டாக்சி ஓட்டுநருக்கு மேலும் உதவி

தனியார் வாடகை கார், டாக்சி ஓட்டுநருக்கு மேலும் உதவி

3 mins read
3ced5c12-cfc5-44ae-9c36-edff43f32053
ஓட்டுநர்கள் ஒரு வாகனத்திற்கு ஒரு நாளைக்கு $25 பெறுவார்கள். இப்போது அவர்கள் $15 பெறுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டாக்சி, வாடகை கார் ஓட்­டு­நர்­கள் இந்த வாரத்­தில் இருந்து கூடு­தலாக நாள்­தோ­றும் அதிக பண உத­வி­யைப் பெறு­வார்­கள். அர­சாங்­கம் இதற்­காக $27 மில்­லி­யன் ஒதுக்கி இருக்­கிறது.

கொவிட்-19 சமூ­கத்­தொற்று அதி­க­ரிப்­ப­தால் கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாகி இருக்­கின்­றன. இதனால் வாடகை கார், டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்கு வரு­வாய் மிக­வும் குறைந்து இருக்­கிறது.

இந்த நிலை­யில், அவர்­க­ளுக்கு உத­வு­வ­தற்­காக ஜூன் மாத முடிவு வரை இந்­தக் கூடு­தல் பண ஆத­ரவு கிடைக்­க­வி­ருக்­கிறது. மொத்­த­மாக பார்க்­கை­யில், ஓட்­டு­நர்­கள் ஒரு வாக­னத்­துக்கு ஒரு நாளுக்கு $25 பெறு­வார்­கள். இப்­போது அவர்­கள் $15 பெறு­கி­றார்­கள்.

இதைக் கணக்­கிட்டு பார்க்­கும் போது ஜூன் மாத முடிவு வரை ஒரு வாக­னத்­துக்கு ஒரு மாதத்­திற்கு $750 நிதி ஆத­ரவு அவர்­களுக்­குக் கிடைக்­கும்.

இத­னால் 16,000 டாக்சி ஓட்­டு­நர்­களும் 40,000 தனி­யார் வாடகை கார் ஓட்­டு­நர்­களும் பலன் அடை­வார்­கள் என்று நேற்று போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இது பற்றி நேற்று குறிப்­பிட்ட நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், ஏற்­கெ­னவே கொவிட்-19 வாகன ஓட்­டு­நர் நிவாரண நிதி­யில் $188 மில்­லி­யன் போடப்­பட்டு இந்த ஆண்டு ஜன­வரி முதல் ஜூன் வரை­யில் அந்­தத் தொகை விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கிறது. இப்­போது அந்த நிதி­யில் மேலும் தொகை சேர்க்­கப்­பட்டு இருக்­கிறது என்று தெரி­வித்­தது.

இதன் தொடர்­பில் டாக்சி, வாடகை கார் நிறு­வ­னங்­க­ளு­டன் ஆணை­யம் சேர்ந்து செயல்­படும்.

டாக்சி, வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளுக்கு இப்­போது அவ­சர உதவி தேவை என்­பதை ஆணை­யம் சுட்­டி­யது. சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 சமூ­கத்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வதற்­காக ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­புக்கு வந்­துள்­ளன.

அத­னை­ய­டுத்து டாக்சி, வாடகை கார் ஓட்­டு­நர்­க­ளின் வரு­வாய் கணி­ச­மா­கக் குறைந்­து­விட்­டது என்­பது முதற்­கட்ட புள்­ளி­விவரங்­கள் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. புதிய கட்டுப்பாடுகளின்படி டாக்சி, வாடகை கார் ஓட்டுவோர் ஒரு நேரத்தில் இரண்டே இரண்டு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.

இது ஒரு­பு­றம் இருக்க, பல்­வேறு கல்வி நிலையங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், முழு நேர­மாக வீட்டில் இருந்தே படிக்­கி­றார்­கள். இத­னால் டாக்சி, வாடகை கார்­க­ளுக்­கான தேவை குறைந்து இருக்­கிறது. கூடு­தல் நிதி உத­விக்குத் தகுதி பெறும் அனைத்து ஓட்­டு­நர்­க­ளுக்­கும் தானா­கவே உதவித் தொகை அவர்­க­ளின் நிறு­வ­னங்­கள் மூலம் கிடைக்­கும்.

இத­னி­டையே, இந்த உதவித் தொகையை ஜூன் மாதத்­திற்கு அப்­பா­லும் மேலும் நீட்­டிப்­பது பற்றி அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தாக ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பெரிய டாக்சி நிறு­வ­ன­மான கம்ஃ­பர்ட்­டெல்­கு­ரோ, டாக்சி ஓட்­டு­நர்­க­ளுக்­கான தன்­னு­டைய அன்­றாட வாட­கைத் தள்­ளு­ப­டியை இந்த வார தொடக்­கத்­தில் 50 விழுக்­கா­டாக உயர்த்­தி­யது.

இதர டாக்சி நிறு­வ­னங்­களும் குறைந்­த­பட்­சம் நாள் ஒன்­றுக்கு ேமலும் $5 வாட­கைத் தள்­ளு­படி கொடுக்­கப்­போ­வ­தாக உறுதி கூறி இருக்­கி­றன்­றன.

மொத்­தத்­தில் ஏறத்­தாழ $28 மில்­லி­யன் கூடு­தல் டாக்சி வாடகைத் தள்­ளு­ப­டி­களைத் தரப்­போ­வ­தாக டாக்சி நிறு­வ­னங்­கள் அறி­வித்து இருக்­கின்­றன என்று ஆணை­யம் தெரி­வித்­தது.

இதே­போ­லவே, கிராப், கோஜெக் நிறு­வ­னங்­களும் ஓட்­டு­நர்­க­ளுக்கு தள்ளுபடிகள் மூலம் உத­விக்­க­ரம் நீட்டி இருக்­கின்­றன.