கார் பேட்டைகளில் சலுகை நேரம் 20 நிமிடம்; விநியோக ஊழியருக்கு உதவி

கார் பேட்டைகளில் சலுகை நேரம் 20 நிமிடம்; விநியோக ஊழியருக்கு உதவி

2 mins read
68fca24f-c72b-4369-bec2-fe5678fcf115
பொருட்களைக் கொண்டு கொடுக்கும் சேவையில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் தங்கள் வாகனத்தை கட்டணமின்றி நிறுத்தி வைப்பதற்கான சலுகை நேரத்தை வீவகவும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் 20 நிமிடங்களாக நீட்டிக்கின்றன. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

மளி­கைப் பொருட்­கள், இதர அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வீடு­களுக்குக் கொண்டு கொடுக்­கும் விநியோகத் தொழி­லில் ஈடு­படும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக குடி­யி­ருப்­புப் பேட்டை­களில் வாக­னத்தை நிறுத்தி வைப்­ப­தற்­காக சலுகை நேரம் 20 நிமி­டங்­க­ளாக நாளை முதல் நீட்­டிக்­கப்­ப­டு­கிறது.

வீவக, நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் கார் பேட்­டை­களில் அந்த ஓட்­டு­நர்­கள் தங்­கள் வாக­னத்தை 20 நிமி­டம் கட்­ட­ண­மின்றி நிறுத்தி வைக்­க­லாம்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று ஃபேஸ்புக்­கில் இந்த அறி­விப்பை விடுத்­தார்.

கொவிட்-19 தொற்றைத் தவிர்த்­துக்கொள்­ளும் வகை­யில் முன்­னி­லும் அதி­க­மான மக்­கள் இப்­போது வீடு­க­ளி­லேயே இருக்­கி­றார்­கள்.

இத­னால் பொருட்­களை வீடு­களுக்குக் கொண்டு கொடுப்­ப­தற்­கான தேவை அதி­க­ரித்து இருக்­கிறது என்­பதை அமைச்­சர் சுட்­டி­னார். கட்­ட­ண­மின்றி வாக­னங்­களை 20 நிமி­டம் நிறுத்தி வைக்­க­லாம் என்­ப­தால் இத்­த­கைய ஊழி­யர்­களுக்கு மேலும் கால­அ­வ­கா­சம் கிடைக்­கும் என்­றார் அமைச்­சர்.

சென்ற ஆண்டு ஏப்­ரல் முதல் ஜூன் வரை இதே­போன்ற சலுகை நேரம் கொடுக்­கப்­பட்­டது.

பிர­பல கடைத்­தொ­கு­தி­களும் தங்­கள் கார் பேட்­டை­களில் சலுகை நேரத்தை 30 நிமி­ட­மாக நீட்­டித்து உள்­ளன.

எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான அனைத்து கார் பேட்­டை­க­ளி­லும் தனி­யார் பேருந்­து­களை நிறுத்தி வைப்­ப­தற்­கான குறிப்­பிட்ட கால கட்­ட­ணத்தைத் தள்­ளு­படி செய்து இருக்­கிறது. இந்­தத் தள்­ளு­படி வரும் ஜூன் 30 வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ள­தாக அமைச்­சர் திரு லீ நேற்று ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இப்­போ­தைய கால­கட்­டத்­தில் பல வாகன ஓட்டு­நர்­கள் பொருட்­களைக் கொண்டு கொடுப்­பது போன்ற கூடு­தல் வேலை­க­ளை­யும் செய்­கி­றார்­கள் என்­பதை நேற்று செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் சுட்­டி­னார்.

பொருட்­களை வீடு­க­ளுக்குக் கொண்டு கொடுக்­கும் சேவை­களுக்­கான தேவை அதி­க­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலை­யில், இத்­த­கைய சேவை­களில் ஈடு­பட்டு இருக்­கும் வாகன ஓட்­டு­நர்­கள், தங்­கள் வாக­னத்தை நிறுத்தி வைக்க செல­விட வேண்­டிய தொகை குறை­யும் என்­ப­தால் அவர்­க­ளுக்கு உதவி கிட்­டும் என்று அமைச்­சர் கூறி­னார்.

கடைத்­தொ­கு­தி­களை நடத்­து­வோ­ரும் தனி­யார் துறை­யி­ன­ரும் இவ்­வாறே செய்து வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு ஆத­ரவு அளிக்க வேண்­டும் என்­றார் திரு ஈஸ்­வ­ரன்.