தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் வழித்தடத்தில் ரயில் சேவை நேரங்களில் மாற்றம் இடம்பெறுகிறது. அதன்படி உட்லண்ட்ஸ் நார்த் முதல் உட்லண்ட்ஸ் சவுத் வரைப்பட்ட அந்த வழித்தடத்தின் முதல் கட்டத்தில் ரயில் சேவைகள் மே 24 முதல் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அன்றாடம் காலை 6.30க்குத் தொடங்கி இரவு 9 மணிக்கு முடி வடைந்துவிடும்.
தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடத்தின் இரண்டாம் கட்ட செயல்பாட்டிற்கு ஆயத்தமாகும் வகையில் தொடர்ந்து பல்வேறு பரிசோதனைகளை நடத்துவதற்கு ஏதுவாக இந்தச் சேவை நேர மாற்றம் இடம்பெறுவதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவை நேரம் மாறுவதால் பயணிகள் பல்வேறு பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவை நேர மாற்றத்தின் போது ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் முதல் மற்றும் கடைசி ரயில் புறப்படும் நேரம் மாறும் என்பதால் பாதிக்கப்படும் நிலையத்தில் அல்லது எஸ்எம்ஆர்டி இணையத்தளத்தில் பயணிகள் நேரத்தைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

