71,600 பேருக்கு மனநலக் குறைபாடு: ஆய்வில் தகவல்

71,600 பேருக்கு மனநலக் குறைபாடு: ஆய்வில் தகவல்

2 mins read
22cdc5ad-ff9f-4191-9ddf-0c4a07eaeb1b
-

சிங்­கப்­பூ­ரில் 18 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட 43 பேரில் ஒரு­வர் தங்­களது வாழ்­நா­ளில் மன­ந­லக் குறை­பாட்­டால் பாதிக்­கப்பட்டுள்ளதாக ஆய்வு முடி­வு­கள் கூறு­கின்­றன. அதா­வது, ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கை­யில் கிட்டத்தட்ட 71,600 பேர் அப்­பி­ரச்­சி­னையை எதிர்­கொள்­கின்­ற­னர்.

சுகா­தார அமைச்சு மற்­றும் தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் நிதி­ ஆத­ர­வில், சுகா­தார அமைச்­சும் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­க­மும் இணைந்து 2016-2018 ஆண்­டு­க­ளுக்கு இடையே '2016 சிங்­கப்­பூர் மன­நல ஆய்வை' மேற்­கொண்­டன. மொத்­தம் 6,126 பேர் பங்­கேற்ற அந்த ஆய்­வின் முடிவுகள் ­நேற்று வெளி­யிடப்பட்டன.

சிங்­கப்­பூர்­வா­சி­களில் 18 வய­தும் அதற்­கும் மேற்­பட்­டோ­ரி­டத்­தில் மன­ந­லக் குறை­பாடு, அது­சார்ந்த கார­ணி­கள், சிகிச்சை இடை­வெளி போன்­றவை குறித்து தேசிய அள­வில் ஆய்வு நடத்­தப்­பட்­டது இதுவே முதன்­முறை.

மன­ந­லக் குறை­பாட்­டால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் மருட்சி, மாயத்­தோற்­றம், ஒழுங்­கற்ற எண்­ணங்­கள், இயல்­பிற்கு மாறாக இயங்­கு­தல் ஆகி­ய­வற்­றில் ஒன்றோ அல்­லது அதற்கு மேற்­பட்ட நட­வ­டிக்­கை­களோ தென்­ப­ட­லாம்.

'ஸ்கிட்­ஸோ­ஃபி­ரெ­னியா' எனும் மனச்­சி­தைவே சிங்­கப்­பூ­ரில் ஆக அதி­க­மா­னோ­ரி­டத்­தில் காணப்­படும் மன­ந­லக் குறை­பா­டா­கக் கூறப்­படு­கிறது. 116 பேரில் ஒரு­வ­ரி­டம், அதா­வது 26,800 பேர் தங்­க­ளது வாழ்­நா­ளில் ஏதே­னும் ஒரு கட்­டத்­தில் அக்­கு­றை­பாட்­டால் பாதிக்­கப்­பட்­டது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மனச்­சி­தை­வால் பாதிக்­கப்­பட்­டு உள்ள ஒரு­வ­ரி­டம் மருட்சி, மாயத்­தோற்­றம், ஒழுங்­கற்ற நடத்தை, சமூ­கத்­தி­லி­ருந்து விலகி இருத்­தல், கவ­னக் குறை­பாடு உள்­ளிட்ட அறி­கு­றி­கள் காணப்­ப­ட­லாம்.

சரா­ச­ரி­யாக 23.1 வய­தில் மன­ந­லக் குறை­பாடு ஏற்­பட்­ட­தும் அந்­தப் பாதிப்பு உள்­ளோர் வேலை இன்றி இருக்க 4.3 மடங்கு வாய்ப்­பி­ருந்­த­தும் ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. ஆயி­னும், மன­ந­லக் குறை­பாட்­டிற்­கும் வேலை­யின்றி இருந்­த­தற்­கும் நேர­டித் தொடர்பு இருக்­க­லாம் என ஆய்­வா­ளர்­க­ளால் உறு­தி­யா­கக் கூற இய­ல­வில்லை.

மன­ந­லக் குறை­பா­டுள்­ளோ­ரில் குறைந்­தது 80.4 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளி­டம் தோன்­றும் அறி­கு­றி­களுக்­காக உதவி நாடி­யுள்­ள­னர்.

மற்ற மன­ந­லப் பிரச்­சி­னை­களைப் போல் மன­ந­லக் குறை­பாடு பொது­வா­னது அல்ல என்­றும் மன­நலக் குறை­பாட்­டால் இறப்பு போன்ற வேறு பல பிரச்­சி­னை­கள் ஏற்­பட அதிக வாய்ப்­புள்­ளது என்­றும் சொன்­னார் இந்த ஆய்­வின் முதன்­மைப் புல­னாய்­வா­ள­ரும் மன­ந­லக் கழ­கத்­தின் ஆய்வு, மன­நோய்ப் பிரி­வின் மூத்த ஆலோ­ச­க­ரு­மான பேரா­சி­ரி­யர் சோங் சியாவ் ஆன்.

"மே 24, உலக மனச்­சி­தைவு நாளாக அனு­ச­ரிக்­கப்­படும் நிலை­யில் இந்த ஆய்வு முடி­வு­களை வெளி­யிட்டிருப்பது சரி­யான நேரத்­தில் நினை­வூட்­டு­வ­தாக அமைந்­துள்­ளது. முன்­கூட்­டியே கண்­ட­றிந்து, தலையிடுவதன் மூலம் பல­ ஆ­யி­ரக்­க­ணக்­கா­னோ­ரின் துய­ரத்­தை­யும் பாதிப்­பை­யும் போக்கி, பெரும் மாற்­றத்தை ஏற்­படுத்­த­லாம்," என்றார் அவர்.