சிகிச்சைப் பிரிவு 9D திறப்பு

சிகிச்சைப் பிரிவு 9D திறப்பு

1 mins read
72ce4c8b-711d-4928-8279-48b9fe8580ec
காற்றுப்போக்கிகள், 'ஹெப்பா' வடிகட்டிகள் போன்ற வசதிகளுடன் டான் டோக் செங் மருத்துவமனையின் '9D' உள்நோயாளிப் பிரிவு இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் கொவிட்-19 தொற்று மைய­மாக விளங்­கிய '9D' உள்நோயாளி சிகிச்சைப் பிரிவு, நோயா­ளி­க­ளை­யும் பணி­யா­ளர்­க­ளை­யும் சிறந்த முறை­யில் பாது­காக்­க­வல்ல மேம்­பட்ட வசதி­க­ளு­டன் இன்று முதல் மீண்­டும் திறக்­கப்­ப­ட இருக்கிறது.

அதே­போல, அங்கு மூடப்­பட்ட இன்­னொரு சிகிச்­சைப் பிரி­வான '9C'யும் இன்­றி­லி­ருந்து மீண்­டும் திறக்­கப்­ப­ட­வுள்­ளது. 7D, 10B ஆகிய சிகிச்­சைப் பிரி­வு­கள் ஏற்­கெ­னவே மீண்­டும் திறக்­கப்­பட்டு­விட்­டன.

நல்ல காற்­றோட்­டத்­திற்­கும் காற்­றுத் தூய்­மைப்­ப­டுத்­த­லுக்­கும் ஏது­வாக, 9D சிகிச்­சைப் பிரி­வில் காற்­றுப்­போக்­கி­களும் 'ஹெப்பா' வடி­கட்­டிகளும் நிறு­வப்­பட்­டுள்­ளன. இவ்­வார இறுதிக்­குள் அம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் மற்ற எல்லா சிகிச்­சைப் பிரிவு­க­ளி­லும் அவை நிறு­வப்­படும்.

இது­வரை அம்­ம­ருத்­து­வ­ம­னைப் பணி­யா­ளர்­களில் 80 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்­டோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தாக இணைப் பேரா­சி­ரி­யர் பெர்­னார்ட் ஓங் தெரி­வித்­துள்­ளார்.