‘தங்கமுனை’ விருதுக்குச் சிறுகதைகள், கவிதைகள் வரவேற்பு

தேசிய அள­வில் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளி­லும் ஈராண்­டு­களுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் 'தங்­க­முனை' விரு­துப் போட்டி மீண்­டும் வந்­து­விட்­டது.

தமிழ், ஆங்­கி­லம், சீனம், மலாய் ஆகிய நான்கு மொழி­க­ளி­லும் சிறு­கதை, கவிதை இரு பிரி­வு­களில் இப்­போட்டி நடத்­தப்­ப­டு­கிறது.

புதிய எழுத்­தா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு ஊக்­கு­விக்­கும் நோக்­கத்­து­டன் நடத்­தப்­படும் இப்­போட்­டி­யில் எழுத்­தார்­வம் உடை­ய­வர்­கள் பங்­கேற்­க­லாம்.

சுவா­ர­சி­ய­மான கதை­களும் வெளி­யி­டப்­ப­டாத கவி­தை­களும் தங்­க­ளி­டம் இருந்­தால் உடனே தேசிய படைப்­பி­லக்­கி­யப் போட்­டிக்கு அனுப்­பி­வை­யுங்­கள். இப்­போட்டி பல நல்ல எழுத்­தா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு உரு­வாக்கியுள்ளது.

விதி­மு­றை­களும் பரி­சு­களும்

பங்­கேற்க விரும்­பு­ப­வர்­க­ளின் படைப்­பு­கள், நாளி­தழ், சஞ்­சிகை, தொகுப்­பு­களில் வெளி­யாகி இருக்­க­லாம். ஆனா, நூல் வெளி­யிட்டு இருக்­கக்­கூ­டாது.

இவ்­வாண்டு தேசிய கலை­கள் மன்­ற­மும் தேசிய புத்­தக மேம்­பாட்டு வாரி­ய­மும் இணைந்து இப்­போட்­டியை நடத்­து­கின்­றன.

சிங்­கப்­பூ­ரர்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் இப்­போட்­டி­யில் பங்­கேற்­க­லாம். கவிதை, சிறு­கதை என இரு பிரி­வு­க­ளி­லும் ஒரு­வர் கலந்து­கொள்­ள­லாம். சிறு­கதை 5,000 சொற்­க­ளுக்கு மிகா­மல் இருக்க வேண்­டும். கவி­தைப் போட்­டிக்கு குறைந்­தது ஐந்து கவி­தை­களை அனுப்ப வேண்­டும். ஒரு விண்­ணப்­பத்­து­டன் எட்­டுக் கவி­தை­கள் வரை அனுப்­ப­லாம்.

நான்கு மொழி­க­ளி­லும் கவிதை, சிறு­கதை இரு பிரி­வு­க­ளி­லும் பரிசு வழங்­கப்­படும்.

முதல் பரிசு: $7,000 ரொக்­கம், சான்­றி­தழ் மற்­றும் கிண்­ணம்.

இரண்­டாம் பரிசு: $5,000 ரொக்­க­மும் சான்­றி­த­ழும்.

மூன்­றாம் பரிசு: $3,000 ரொக்­க­மும் சான்­றி­த­ழும்.

போட்டி விதி­மு­றை­கள் குறித்த கூடுதல்­ வி­வ­ரங்­க­ளுக்­கும் விண்­ணப்பப் படி­வத்­திற்­கும் https://artshouselimited.sg/gpa எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­வும்.

விவ­ரங்­க­ளுக்­குத் தொடர்­பு­கொள்ள வேண்­டிய மின்­னஞ்­சல் முக­வரி: gpa@artshouse.sg, தொலை­பேசி எண்: 8246 0877.

இவ்­வாண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 22ஆம் தேதிக்­குள் படைப்­பு­களை அனுப்ப வேண்­டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!