சிங்கப்பூர் தேசிய கவிதை விழாவை முன்னிட்டு, நான்கு மொழிகளிலும் கவிதைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
10 முதல் 14 வயதுடையோர், 15 முதல் 17 வயதுடையோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டியில் ஆர்வமுடைய சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் பங்கேற்கலாம். 'சமூகம் (Community)' எனும் கருப்பொருளை ஒட்டி கவிதைகள் எழுதப்பட வேண்டும். தலைப்பு எதுவாகவும் இருக்கலாம்.
தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் என நான்கு மொழிகளிலும் கவிதைகளை எழுதி அனுப்பலாம். 40 க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் மூன்று கவிதைகளுக்கும் தேர்வுபெறும் கவிதைகளுக்கும் ம் ப் . மேலும், தேர்வுபெறும் கவிதைகள் நான்கு மொழித் தொகுப்பிலும் இடம்பெறும்.
தேர்வுபெறும் தமிழ்க் கவிதைகளை எழுதியோர் பின்னர் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். தேர்வுபெறும் கவிதைகள் தேசிய கவிதை விழாவில் வாசிக்கப்படும்.
கவிதைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: nationalpoetryfestival@gmail.com. இம்மாதம் 28ஆம் தேதிக்குள் கவிதைகளை அனுப்பி வைக்க வேண்டும்.
மேல்விவரங்களுக்கு https://www.facebook.com/poetryfestivalsg, https://form.jotform.com/210681034595051 ஆகிய இணையப்பக்கங்களைப் பார்க்கவும்.

