ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் விபத்து: லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் ஒரு மணி நேரத்தில் மீட்பு

ஜூரோங் ஈஸ்ட் வட்டாரத்தில் விபத்து: லாரிக்குள் சிக்கிய ஓட்டுநர் ஒரு மணி நேரத்தில் மீட்பு

2 mins read
b37da9ab-a64a-471a-ab8e-6eaf5bb491ce
பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் லாரி ஓட்டுநரை மீட்க பெருமுயற்சி எடுத்தனர். (வலது படம்) விபத்தில் நசுங்கிய லாரியின் முன்பகுதி. படங்கள்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் -
multi-img1 of 2

ஜூரோங் ஈஸ்ட் வட்­டா­ரத்­தில் நேற்று நிகழ்ந்த விபத்து ஒன்­றில் லாரி ஓட்­டு­நர் அவ­ரது இருக்­கை­யி­லேயே சிக்­கிக்­கொண்­டார்.

தோ குவான் ரோடு-தோ குவான் ரோடு ஈஸ்ட் சந்­திப்­பில் நிகழ்ந்த வேன்-லாரி மோத­லில் லாரி­யின் முன்­

ப­குதி பலத்த சேத­ம­டைந்­தது.

ஓட்­டு­ந­ரின் இருக்­கைப் பகுதி நசுங்­கி­யது. லாரி­யின் வேக விசைக்­கும் நிறுத்து விசைக்­கும் இடை­யில் ஓட்­டு

­ந­ரின் கால்­கள் சிக்­கிக்­கொண்­ட­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்­சி­டி­எஃப்) தனது ஃபேஸ்புக்­கில் தெரி­வித்­தது.

காலை 10.15 மணி­ய­ள­வில் தமக்கு இவ்­வி­பத்து தொடர்­பாக உதவி கேட்டு அழைப்பு வந்­த­தா­க­வும் ஜூரோங், கிள­மெண்டி தீய­ணைப்பு நிலை­யங்­களில் இருந்து அவ­ச­ர­நி­லைக் குழு­வி­னர் சம்­பவ இடத்தை நோக்கி விரைந்து சென்­ற­தா­க­வும் அந்­தப் பதி­வில் எஸ்­சி­டி­எஃப் தெரி­வித்­தது. குறிப்­பாக, "பேரி­டர் உதவி, மீட்­புக் குழு­வி­ன­ரும் அங்கு சென்­ற­னர். அவர்­கள் குறு­கிய ஓட்­டு­நர் அறைப் பகு­தி­யில் 'ஹைட்­ரா­லிக்' மீட்புச் சாத­னம் உள்­ளிட்­ட­வற்­றைப் பயன்­ப­டுத்தி, நசுங்­கிய பகு­தியை வெட்­டி­னர். அதன் பின்­னர் ஓட்­டு­நரை அவர்­கள் மீட்­ட­னர்," என எஸ்­சி­டி­எஃப் கூறி­யது.

மீட்­புப் பணி முழு­வ­தும் ஓட்­டு­ந­ரின் நிலையை மருத்­துவ உத­விக் குழு­வி­னர் கண்­கா­ணித்­தபடி இருந்­த­தா­க­வும் அது அந்த ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

இந்த மீட்­புப் பணி கிட்­டத்­தட்ட ஒரு மணி நேரம் நீடித்­தது. சுய­நி­னை­வு­டன் இருந்த அவர் பின்­னர் சிகிச்­சைக்­காக தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

இவ்­வி­பத்­தில் தொடர்­பு­டைய வேனின் ஓட்­டு­நர், இங் டெங் ஃபோங் பொது மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­லப்­பட்­டார். இவ­ரும் சுய­நி­னை­வு­டன் இருந்­தார்.