'டுவெல்வ் கப்கேக்ஸ்' நிறுவனம் தனது வெளிநாட்டு ஊழியர்களுக்குக் குறைவான சம்பளம் தருவதைத் தடுக்கத் தவறியதற்காக டேனியல் ஓங் மிங் யு, 45, என்னும் முன்னாள் வானொலி படைப்பாளருக்கு நேற்று $65,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இவர், அப்போதைய தமது மனைவி ஜய்மி டியோ சாய்-லின்னுடன் இணைந்து இந்நிறு
வனத்தை 2011ஆம் ஆண்டு தொடங்கினார். வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழான பத்து குற்றச்சாட்டுகளை டேனியல் ஒப்புக் கொண்டார்.
இதேபோன்ற 14 குற்றச்சாட்டுகள் தண்டனை அறிவிக்கப்பட்ட போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
இவரது அப்போதைய மனைவிக்கும் கடந்த மார்ச் மாதம் பத்து குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் $65,000 அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழியர்களை இவர்கள் வேலைக்கு அமர்த்தினர். அவர்களில் எழுவருக்கு 2013ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள் நால்வர், விற்பனை நிர்வாகிகள் இருவர், உணவுப் பண்டம் தயாரிக்கும் ஒருவர் ஆகியோர் ஒப்புக்கொள்ளப்பட்டதைக் காட்டிலும் குறைவான சம்பளம் வாங்கியவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
உதாரணமாக, உணவுப் பண்டம் தயாரிப்பவரின் மாதச் சம்பளம் $2,300 என்று 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அப்போது முதல் 2016ஆம் ஆண்டு நடுப்பகுதி வரை அவருக்கு $1,600 சம்பளம் தரப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இவ்வாறு ஊழியர்களுக்குத் தர வேண்டிய சம்பளப் பாக்கி $98,900 என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விருவரும் தங்களது நிறு வனத்தை கோல்கத்தா நிறுவன மான தன்சேரி குழுமத்திடம் 2016 ஆம் ஆண்டு $2.5 மில்லியனுக்கு விற்றுவிட்டனர். டுவெல்வ் கப் கேக்ஸ் நிறுவனம் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் தனது ஊழியர்க ளுக்குக் குறைவான சம்பளம் வழங்கிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி தண்டிக்கப்பட்டது.

