‘கிருமி பரப்புபவர்’: அண்டை வீட்டு தாதியை துன்புறுத்தியதாக தம்பதி மீது குற்றச்சாட்டு

அண்டை வீட்­டுக்­கா­ர­ரான செங்­காங் பொது மருத்­து­வ­மனை தாதியை துன்­பு­றுத்­தி­ய­தாக தம்­பதி மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

வேண்­டு­மென்றே துன்­பு­றுத்­திய இரு குற்­றச்­சாட்­டு­களை சியாங் எங் ஹாக், 56, என்­ப­வ­ரும் அதே­போன்ற ஐந்து குற்­றச்­சாட்­டு­க­ளோடு பொது­மக்­க­ளுக்கு இடை­யூறு விளை­வித்த ஒரு குற்­றச்­சாட்டை இவ­ரது மனைவி லிம் சோக் லே, 48, என்ற மாதும் எதிர்நோக்கினர்.

பொங்­கோ­லில் உள்ள வீவக புளோக்­கில் கடந்த ஆண்டு மே மாதம் அண்டை வீட்­டுக்­கா­ரர்­களை வார்த்­தை­கள் மூல­மும் நடத்தை வாயி­லா­க­வும் துன்­பு­றுத்­தி­ய­தாக ஏற்­கெ­னவே குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

அண்டை வீட்­டாரை நோக்கி அந்­தத் தம்­ப­தி­யி­னர் கிருமி நாசினி தெளித்­த­தா­க­வும் சொல்­லப்­பட்­டது.

மேலும், இவ்­வாண்டு ஜன­வரி 8ஆம் தேதி செங்­காங் பொது மருத்­து­வ­மனை சென்ற தம்­ப­தி­யர், அங்கு வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஆட­வ­ரான தாதியை அவர்­கள் வார்த்­தை­க­ளால் அவ­ம­தித்­த­னர்.

'இந்த தாதி ஒரு குண்­டர்' என்­றும் 'அவர் நல்­ல­வர் அல்ல' என்­றும் 'மோச­மான தாதி' என்­றும் தம்­ப­தி­யி­னர் கூறி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட ஆட­வர் முகம்­மது நஜிப் இங்­க­செ­வான் என்று அடை­யா­ளம் காணப்­பட்­டது. அவ­ரது மனை­வி­யும் அத்­தி­யா­வ­சி­யச் சேவை­யில் பணி­பு­ரி­ப­வர் என்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது.

கடந்த ஆண்டு மே 13க்கும் மே 15க்கும் இடைப்­பட்ட நாட்­களில் 'கிருமியைப் பரப்­பு­ப­வர்' என்­றும் 'கிருமி குடும்­பம்' என்­றும் பாதிக்­கப்­பட்ட குடும்­பத்­தி­னரை நோக்கி வார்த்­தை­க­க­ளால் இத்­தம்­பதி துன்­பு­றுத்­தி­ய­தா­கக் குற்­றச்­சாட்­டில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு அக்­டோ­பர் 21ஆம் தேதி தங்களது பக்­கத்து வீட்­டில் கிருமி நாசினி திர­வத்தை லிம், தெளித்­த­தோடு அதற்கு அடுத்த மாதம் மற்­றொரு வீட்­டுக்­கா­ரரை நோக்கி தகாத வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

இச்­சம்­ப­வங்­கள் தவிர, இவ்­வாண்டு பிப்­ர­வரி 21ஆம் தேதி ஆர்ச்­சர்ட் ரோட்­டில் உள்ள நீ ஆன் சிட்­டி கடைத்தொகுதிக்குச் சென்ற தம்­ப­தி­யி­னர், அங்கு தேவை­யின்றி உரக்­கக் கத்­தி­ய­தா­க­வும் அங்­கி­ருந்த போலிஸ் பெண்­மணி பல­முறை எச்­ச­ரித்த பின்­ன­ரும் அவர்­

க­ளின் கூச்­சல் தொடர்ந்­த­தா­க­வும் நீதிமன்ற விசாரணையின்போது கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!