தொழிற்சங்கத் தலைவர்களும் சுகாதார அதிகாரிகளும் ஆலோசனை
அண்மைய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்புக்கிடையே எழுந்திருக்கும் மன
உளைச்சல் சூழ்ந்த நிலையில் சுகாதாரப் பராமரிப்பாளர்களின் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது எவ்வாறு என்பது குறித்த சிந்தனையில் தொழிற்சங்கத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களிடம் அவர்கள் கருத்துகளைத் திரட்டி வருகின்றனர். அந்த ஊழியர்கள் தெரிவித்த கருத்துகள் சுகாதார அமைச்சு, மருத்துவமனை நிர்வாகங்கள் ஆகியவற்றிடம் கொண்டு சென்று தொழிற்சங்கத் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.
இது தொடர்பாக தேசிய தொழிற் சங்க காங்கிரசின் துணைத் தலைமைச் செயலாளர் சீ ஹொங் டாட் ேநற்று தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"நமது முன்களப் பணியாளர்
களின் நல்வாழ்வுக்கு ஆதரவு வழங்கி அவர்களின் நிலைமையை முன்னேற்றுவது தொடர்பாக மேற்கொண்டு விவாதிக்க உள்ளோம். டான் டோக் செங் மருத்துவ
மனையுடன் மட்டுமல்லாது வெவ்வேறு சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிடமும் இந்த ஆலோசனை நடத்தப்படும்," என்று அந்தப் பதிவில் திரு சீ குறிப்பிட்டுள்ளார்.
டான் டோக் செங் மருத்துவ
மனையைச் சேர்ந்த ஊழியர்களிடமும் தொழிற்சங்க உறுப்பினர்
களிடமும் கடந்த புதன்கிழமை தாம் இணையம் வழியான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாத் தெரிவித்தார் சுகாதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர் சங்கத்தின் ஆலோசகருமான திரு சீ.
டான் டோக் செங் மருத்துவமனை ஊழியர்களும் இதர சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களும் பொதுமக்களில் சிலரால் பாரபட்சமாக நடத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை தொழிற்சங்கம் முடுக்கிவிட்டுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதி டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 கிருமித்தொற்று குழுமம் உருவான பின்னர் இப்புகார்கள் வரத்தொடங் கின.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் உதவிக்கொண்டு இருக்கும் சுகாதாரப் பராமரிப்பாளர்
களின் முயற்சிகளைப் பாராட்டும் விதமாக 12,000 அன்பளிப்புப் பைகளை அவர்களுக்கு விநியோகிக்கும் ஏற்பாடுகளில் தொழிலாளர் இயக்கம் ஈடுபட்டு வருகிறது.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிக் குழுமமும் காதாரப் பராமரிப்புச் சேவை ஊழியர் சங்கமும் இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளன.

