மூவரில் ஒருவருக்கு மேற்பட்டோர் ஒரு தடுப்பூசியாவது போட்டனர்
சிங்கப்பூரில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள், அல்லது மூவரில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் தங்களுக் கான முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார். இதன்மூலம் சிங்கப்பூர் அதன் மைல்கல்லை தாண்டியுள்ளதாகவும் தடுப்பூசி போட்டுக்கொண்ட இவர்கள் கிருமிக்கு எதிரான நல்லதொரு பாதுகாப்பைப் பெற்றுள்ள னர் என்றும் அவர் தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
"தடுப்பூசி விநியோகம் சீராகத் தொடரும் வேளையில் ஜூன் மாத இறுதிக்குள் 4.3 மில்லியன் மக்கள், முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றிருப்பர். அதற்கு அடுத்தபடி யாக இரு தவணை தடுப்பூசிகளையும் மக்கள் போட்டுக் கொள்ளும் கடப்பாட்டை நோக்கி நகர வேண்டும். எல்லா ருக்கும் அதிகபட்ச உடல்நலப் பாதுகாப்பு என்னும் நமது குறிக்கோளில் மாற்றமில்லை," என்று திரு ஓங் தெரிவித்து உள்ளார். இதற்கு முன்னர் கடந்த செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓங், குறைந்த பட்சம் முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட வர்களின் எண்ணிக்கை இரு மில்லியனை நெருங்கு வதாகச் சொல்லி இருந்தார்.
மோசடி, கையாடல், மானபங்கம்:
ஏழு ஆண்டு, ஏழு மாதம் சிறை
மோசடி, கையாடல், மானபங்கம் போன்ற குற்றங்களில் ஈடபட்ட ஆடவர் ஒருவருக்கு நேற்று ஏழு ஆண்டு, ஏழு மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சோங் வீ இயூ எனப்படும் அந்த 56 வயது ஆடவர் 77 பேரிடம் மோசடி செய்ததாகவும் மோசடி தொகை $1 மில்லியனுக்கும் மேல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமது மோசடியில் சிக்கியோரில் ஒருவரை மெரினா பே சேண்ட்ஸில் இருமுறை மானபங்கம் செய்தார் இவர். இரு மானபங்கக் குற்றச்சாட்டு களையும் $500,000க்கும் மேற்பட்ட தொகை சம்பந்தப்பட்ட நான்கு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளையும் சோங் ஒப்புக்கொண்டார். $200,000க்கும் மேற்பட்ட தொகையுடன் சம்பந்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண் டார். இருப்பினும் தம்மிடம் ஏமாந்தோருக்குப் பணம் எதையும் திருப்பித்தருவது தொடர்பாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதர 103 குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சோங் தமது குற்றங்கள் அனைத்தையும் 2016ஆம் ஆண்டிலும் 2017ஆம் ஆண்டிலும் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மெரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூட உறுப்பினரான சோங் தமக்கு இலவசமாகக் கிடைத்த ஹோட்டல் அறைகளைப் பணத்திற்கு விற்கும் முயற்சியில் இறங்கியதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர். மலிவான கட்டணத்திற்கு அறையை வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்த அவர், முன்பணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு பெறப்பட்ட பணத்தை அவர் கையாடல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

