வேலையிட ஊழியர் விவரங்களை தெரிவிக்க நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை

வேலையிட ஊழியர் விவரங்களை தெரிவிக்க நிறுவனங்களுக்கு அமைச்சு கோரிக்கை

1 mins read
5ccab600-3034-4fbd-a912-267e9ace8215
-

நிறுவனங்களின் உரிமையாளர்கள் வேலையிட ஊழியர்களின் விவரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகத்தொற்று கூடி வருகிறது. அதை ஒடுக்க முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில், வெளி இடங்களில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் கண்காணிக்க ஏதுவாக நிறுவனங்களுக்கு அந்த வேண்டுகோளை வர்த்தக, தொழில் அமைச்சு விடுத்துள்ளது.

இந்த நடைமுறை புதிதான ஒன்று அல்ல. சென்ற ஆண்டு முதலே இது நடப்பில் இருந்து வருகிறது என்று இந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

என்றாலும் இந்த நடைமுறை சென்ற மாதம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இருந்தாலும் இப்போது நிறுவனங்கள் இதை மீண்டும் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேலையிடங்களில் கலந்துறவாடல்கள் குறைவதன் மூலம் கொவிட்-19 தொற்று ஆபத்தைக் குறைக்க உதவி கிடைக்கும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

நிறுவனங்கள், ஊழியர்கள் பற்றிய புதிய எண்ணிக்கை விவரங்களை அரசாங்கத்தின் இணைய வாசலில் தெரிவிக்கலாம்.

சிங்கப்பூரில் ஜூன் 13 வரை நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன. வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நடைமுறை ஒருபுறம் இருக்க, நடமாட்டங்கள், சமூக ஒன்றுகூடல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.