பிரதமர்: அனைத்துலக அளவில் அணுக்க ஒத்துழைப்பு அவசியம்

பிரதமர்: அனைத்துலக அளவில் அணுக்க ஒத்துழைப்பு அவசியம்

1 mins read
d3622c75-b2f7-40d4-826a-9de6616928c5
-

பெருந்­தொற்­று­க­ளுக்கு எதி­ரான போரில் அனைத்­து­லக அள­வில் அணுக்­க­மான, பல­த­ரப்பு ஒத்­துழைப்பு மிக இன்­றி­ய­மை­யா­தது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

இத்­தா­லி­யின் ரோம் நக­ரில் நேற்று முன்­தி­னம் நடந்த 'ஜி20' உல­க­ளா­விய சுகா­தார உச்­ச­நிலை மாநாட்­டில் மெய்­நி­கர் வழி­யா­கக் கலந்­து­கொண்டு பேசிய பிர­த­மர் லீ, ஒவ்­வொ­ரு­வ­ரும் பாது­காப்­பாக இல்­லா­த­வ­ரை­யி­லும் ஒரு பெருந்­தொற்­றின்­போது எந்த ஒரு நாட்­டிற்­கும் பாது­காப்பு இல்லை என்­பதை திரும்­பத் திரும்ப வீசும் கொவிட்-19 அலை காட்­டு­கிறது என்று கூறி­னார்.

இந்­தச் சிர­ம­மான கால­கட்­டத்­தி­லும், விநி­யோ­கத் தொட­ரைச் சீர­மைப்­ப­தி­லும் வெளி­நா­டு­களில் சிக்­கி­யி­ருந்த குடி­மக்­க­ளைத் தாய்­நாடு திரும்­பச் செய்­வ­தி­லும் மருத்­து­வத் தள­வா­டங்­க­ளைப் பகிர்ந்து­கொள்­வ­தி­லும் உலக நாடு­கள் இணைந்து செயல்­பட்டு வரு­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

எல்லா நாடு­க­ளுக்­கும், குறிப்­பாக வளர்ச்சி குறைந்த நாடு­களுக்­கும் தடுப்­பூசி கிடைக்­கும் வகை­யில், 'கொவேக்ஸ்' போன்ற தடுப்­பூசி பன்­மு­கத்­தன்மை திட்­டங்­களை நாடு­கள் ஆத­ரித்­த­தா­க­வும் அவர் சொன்­னார்.

உலகை இன்­னும் கொரோனா நோய்ப் பர­வல் சூழ்ந்­தி­ருப்­ப­தைச் சுட்­டிக்­காட்­டிய பிர­த­மர், "இதுவே கடை­சி­யா­க­வும் ஆக மோச­மா­க­வும் நாம் எதிர்­கொள்­ளும் பெருந்­தொற்­றாக இருந்துவிடாது. கூடிய விரை­விலோ அல்­லது பிற்­கா­லத்­திலோ, அதி­கம் பர­வக்­கூ­டிய அல்­லது ஆபத்­தான தொற்று உரு­வெ­டுக்­க­லாம். ஆகை­யால், கொரோனா தொற்­றில் இருந்து பாடம் கற்­றுக்­கொண்டு, அடுத்த பெருந்­தொற்றை எதிர்­கொள்ள நாம் ஆயத்­த­மாக வேண்­டும்," என்று கேட்­டுக்­கொண்­டார்.

உல­க­ளா­விய சுகா­தா­ரக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்த ரோம் கோட்பாடுகள் பிர­க­ட­னத்­தைச் சிங்­கப்­பூர் முழு­மை­யாக ஆத­ரிப்­ப­தா­க­வும் திரு லீ சொன்­னார்.