வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

1 mins read
156e5cd3-cce5-45fb-8076-b38f95f743eb
-

வீட்டில் இருந்தபடியே மருத்துவ, தாதிமை அல்லது தனிப்பட்ட பராமரிப்பு சேவைகளைப் பெறுவோருக்கு, அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை இரண்டு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன. அவ்வகையில், கடந்த புதன்கிழமை வரை பத்துப் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஒவ்வொரு குழுவிலும் மருத்துவர் ஒருவரும் தாதி ஒருவரும் உள்ளனர். எல்லா நேரங்களிலும் உகந்த வெப்ப நிலையை உறுதிசெய்யும் விதமாக, வெப்பநிலை கண்காணிப்புக் கருவியுடன் கூடிய குளிர்ப் பெட்டியில் வைத்து தடுப்பூசிகள் எடுத்துச் செல்லப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.