மின்ஸ்கூட்டர் எண்ணிக்கை 91.5% சரிந்தது

மின்ஸ்கூட்டர் எண்ணிக்கை 91.5% சரிந்தது

1 mins read
b8738ccd-56fe-4160-8a09-d4b5b713a2ae
-

சிங்கப்பூரில் மின்ஸ்கூட்டர்கள் 91.5% குறைந்துவிட்டன. மின்ஸ்கூட்டர் உள்ளிட்ட தனிநபர் நடமாட்ட சாதனங்களை நடைபாதைகளில் பயன்படுத்தக்கூடாது என்று 2019 நவம்பரில் தடை விதிக்கப்பட்டது. அதை அடுத்து அவற்றின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

சிங்கப்பூரில் பதியப்பட்ட மின்ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மார்ச் மாத முடிவு வாக்கில் ஏறத்தாழ 8,500 ஆக இருந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. இங்கு 2019 நவம்பரில் ஏறத்தாழ 100,000 மின்ஸ்கூட்டர்கள் இருந்தன. அவை இப்போது 91.5% குறைந்துவிட்டன.

இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவரான ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங், பொறுப்புடன் பயன்படுத்தப்படும் பட்சத்தில் தனிநபர் நடமாட்ட சாதனங்களுக்கு சிங்கப்பூரில் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்றார்.