சாதனை விலையில் விற்பனையான குளூனி ஹில் பங்களா வீடு

சாதனை விலையில் விற்பனையான குளூனி ஹில் பங்களா வீடு

1 mins read
5bf6f7f6-a72c-423e-b4a3-46bc73ea20f7
படம்: பிஸ்னஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் பூமலைக்கு அருகிலுள்ள குளூனி ஹில் பகுதியில் பங்களா வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

முற்றுரிமை சொத்தான இது, $63.7 மில்லியனுக்கு விலைபோகிறது.

ஒவ்வொரு சதுர அடிக்கும் $4,291 என்ற நிலையில், இது சாதனை அளவிலான விற்பனை என்று கூறப்படுகிறது. நிலத்தின் மொத்த அளவு 14,983 சதுர அடி.

இதற்குமுன் 32,159 சதுர அடி கொண்ட நசிம் ரோடு பங்களா ஒன்று, சதுர அடிக்கு $4,005 என விலை போனதே சாதனை அளவாக இருந்தது.

குறிப்புச் சொற்கள்