ஜெம், வெஸ்ட்கேட்டில் சுத்திகரிப்புப் பணி

ஜூரோங்­கில் உள்ள 'ஜெம்', 'வெஸ்ட்­கேட்' கடைத்­தொ­கு­தி­களில் சுத்­தம் செய்­யும் பணி­கள் நேற்று தீவி­ர­மாக நடந்­தன. ஒரு சில கடைக்­கா­ரர்­கள் தங்­க­ளின் இருப்­பு­களை வேறு கிளைக்கு அனுப்­பு­வ­தற்­காக கடைக்கு வெளியே வைத்திருந்தனர். வந்த வாடிக்­கை­யா­ளர்­கள் திருப்பி அனுப்பப்­பட்­ட­னர்.

நேற்று முதல் பாலம் ஒன்­றால் இணைக்­கப்­பட்­டுள்ள இந்த இரண்டு கடைத்­தொ­கு­தி­களும் மூடப்­பட்­டன. இரு வாரங்­க­ளுக்­குப் பிறகு ஜூன் 6ஆம் தேதி­யன்று அவை மீண்­டும் திறக்­கப்­படும்.

தொடர்­பு­கள் கண்­ட­றி­யப்­ப­டாத கொவிட்-19 நோயா­ளி­கள், இந்த இரு கடைத்­தொ­கு­தி­க­ளுக்­கும் சென்­றி­ருந்­ததை அடுத்து அங்கு கொவிட்-19 பர­வ­லைத் தடுக்­க­வும் கடைத்­தொ­குதி வளா­கத்தை முற்­றி­லு­மாக சுத்­தப்­ப­டுத்­த­வும் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இரண்டு கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் தலா 250 சில்­லறை வர்த்­த­கங்­கள் உள்­ளன. இதற்­கி­டையே, வெஸ்ட்­கேட் கடைத்­தொ­குதி உரி­மை­யா­ளர் 'கேப்­பிட்­ட­லேண்ட்', கடைக்­கா­ரர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வியை நல்­கும் என்று கூறி­யுள்­ளது.

சமூ­கத்­தில் 21 பேர்,

தங்­கு­வி­டு­தி­யில் ஒரு­வர் பாதிப்பு

சமூக அள­வில் 21 பேர் உட்­பட சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வரப்­படி புதி­தாக 25 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

சமூ­கத்­தில் கிருமி தொற்­றி­ய­வர்­களில் மூவ­ருக்­கும் முன்­ன­தாக கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் தொடர்பு ஏதும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. எஞ்­சிய 19 பேரும் முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­களில் 12 பேர் ஏற்­கெனவே தனிமை உத்­த­ர­வின்­கீழ் வைக்­கப்­பட்­டு­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில், வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் புதி­தாக ஒரு­வ­ருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அது­போக, வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த மூன்று பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது. அவர்­களில் இரு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள்.

சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 61,824ஐ எட்­டி­யுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!