மனநல மீள்திறனில் கவனம்
செலுத்தும் சிறுவர் புத்தக விழா
மனரீதியான மீள்திறன், மின்னிலக்கமயம் ஆகிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாண்டுக்கான 'நூல்கள், வாசிப்புக்கான ஆசிய சிறுவர் விழா' (ஏஎஃப்சிசி) திட்டமிடப்பட்டுள்ளது. கொள்ளைநோய் சூழலில் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் விழா, நேரடி நிகழ்வாக நடைபெறாது. வரும் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை விழா இணையத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 400 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் கற்றலை மேற்கொண்டு வரும் சிங்கப்பூர் மாணவர்களுக்கான இணைய வளங்களைத் தேடும் உத்திமுறைகளையும் விழா வழங்கத் திட்டமிட்டுள்ளது.
சாதனை விலையில் விற்பனையான குளூனி ஹில் பங்களா வீடு
சிங்கப்பூர் பூமலைக்கு அருகிலுள்ள குளூனி ஹில் பகுதியில் பங்களா வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. முற்றுரிமை சொத்தான இது, $63.7 மில்லியனுக்கு விலைபோகிறது. ஒவ்வொரு சதுர அடிக்கும் $4,291 என்ற நிலையில், இது சாதனை அளவிலான விற்பனை என்று கூறப்படுகிறது. நிலத்தின் மொத்த அளவு 14,983 சதுர அடி. இதற்குமுன் 32,159 சதுர அடி கொண்ட நசிம் ரோடு பங்களா ஒன்று, சதுர அடிக்கு $4,005 என விலை போனதே சாதனை அளவாக இருந்தது.

