அரசாங்கம் சென்ற ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 1,630 ஃபேஸ்புக் கணக்குகள் தொடர்பில் தகவல் கேட்டு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 1,260 கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது.
அதற்கு முந்தைய ஆண்டின் இதே ஆறு மாதங்களில் சமர்க்கப்பட்ட கோரிக்கைகளைக் காட்டிலும் சென்ற ஆண்டின் எண்ணிக்கை மும்மடங்கு என்று கூறப்பட்டது.
மேலும், மற்ற ஆசியான் நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரே அதிகமான கோரிக்கைகளைச் சென்ற ஆண்டு செய்திருந்ததாகவும் கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 83% தரவு கோரிக்கைகளுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் உடன்பட்டு வழங்கியதாகவும் வியாழக்கிழமையன்று அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மோசடிச் சம்பவங்கள் உட்பட இணையக் குற்றம் தொடர்பில் தரவு கோரிக்கை எண்ணிக்கை அதிகரித்ததாக தொடர்பு, தகவல் அமைச்சு குறிப்பிட்டது.
அனைத்துலக அளவில் 191,013 தரவு கோரிக்கைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

